பேச்சு:மீமுரண் மயிர்நோய்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இயல்புக்கு மீறிய மாற்றம் தானே விகாரம் எனப்படுவது...எனவே அதையொட்டி முடிமிகைப்பு விகாரம் அல்லது முடிமிகைவிகாரம் என்று தலைப்பிடலாம் என்று நினைக்கிறேன்.--சங்கீர்த்தன் (பேச்சு) 12:05, 7 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி சங்கீர்த்தன், நல்ல பரிந்துரை. முடிமிகைவிகாரம் நன்கு அமைகின்றது. வேறு பயனர்களின் கருத்தையும் பார்த்துவிட்டு மாற்றுகிறேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:35, 7 ஆகத்து 2012 (UTC)Reply
இதனை மீமுரண் மயிர்நோய் எனலாமா? முரண் என்பது இயல்புக்கு மாறாக வருவதைக் குறிக்கவும், மீ என்பது அளவுக்கு அதிகமாக மயிர் முளைப்பதைக் குறிக்கவும் பயன்படுத்தலாம் ("hyper") என்று நினைக்கின்றேன். முடி என்பது உடலின் முடிவாக அமையக்கூடிய நீட்சி முனை என்பது என்றாலும், அது உடலின் எங்கும் உள்ள மயிரைக் குறிக்கப் பயன்படுத்தலாம் என்றாலும், முடி என்பது தலையில் இருக்கும் முடிக்குப் பெரும்பாலும் பயன்படுவது. அரசர்களுக்குத் தலையில் வைக்கும் வளையம் போன்ற கிரீடம் என்பதை முடி என்றும் கூறுவர். இதனால் முடி என்னும் சொல்லை முகத்தில் (மீசை, தாடி, காது, மூக்கு) அல்லது நெஞ்சில் உடலின் பிற பகுதிகளில் வளரும் இழைபோன்ற மயிருக்குப் பயன்படுத்தக்கூடாது என்பது பொருள் அன்று. மயிர் என்பது பொதுவான சொல் (மயிரிழையில் உயிர் தப்பினார் என்று கூறுவது போல மயிர் என்பது பொதுவாக தோலின் மீது வளரும் மெல்லிய இழைக்குப் பெயர்). எனவே இந்த நோயை மீமுரண் மயிர்நோய் எனலாம். (மயிர் தொடர்பான பிற சொற்கள்: மயிர், முடி, கூந்தல், குடுமி, குழல், சடை போன்ற ஒரு சில சொற்களே இன்று பரவலாக அறியப்பட்டாலும், குதிரையின் கழுத்தில், அரிமா (சிங்கத்தின்) பிடரியில் இருக்கும் முடிக்கு உளை என்று பெயர். ஆண் மயிரின் பெயர் ஓரி (இதனை விலங்கின் பிடரி மயிருக்கும் பயன்படுத்துவர்), பங்கி என்றாலும் ஆண் முடி, ஓதி என்றால் பெண்மயிர். சுருட்டையான முடிக்குச் சுரியல்; பொச்சு, பொச்சம் என்றால் பெண்குறி மயிர்.)--செல்வா (பேச்சு) 13:56, 13 ஆகத்து 2012 (UTC)Reply
விகாரம், அகோரம் முதலானவை வடமொழிச்சொற்கள் (தமிழிலும் பயன்படுத்தப்படும் சொற்கள்). கோரா என்றால் வெண்மை, அகோரம் என்றால் கறுப்பு என்று பொருள்படலாம். விகாரம் என்றால் பிறழ்ச்சி, வேறுபாடு, மாறுபாடு என்பது. இங்குப் பொருந்தும். பிறழ்வளர்ச்சி என்றால் மாறுபாடான வளர்ச்சி. --செல்வா (பேச்சு) 14:00, 13 ஆகத்து 2012 (UTC)Reply
மிக்க நன்றி, அருமையான விளக்கத்துடன் புதிய விடயங்களை அறிந்து கொண்டேன். மீமுரண் மயிர்நோய் என்றே மாற்றிவிடுகின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:07, 13 ஆகத்து 2012 (UTC)Reply
நன்றி செந்தி :) --செல்வா (பேச்சு) 16:40, 13 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "மீமுரண் மயிர்நோய்" page.