பேச்சு:முகடு நாட்டல்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
@செல்வா: ”Topping out” என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை இக்கட்டுரையின் தலைப்புக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:44, 6 மே 2017 (UTC)
- உச்சிவிட்டம் என்பதை முகடு என்போம் அல்லவா, அதையும் நிலைகால் நடுதல்-நாட்டுதல் என்போம் அல்லவா அதையும் கருதில் கொண்டு முகடு நாட்டல் எனலாம். மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு என்னும் சொல்லாட்சியைக் கேட்டிருப்போம், அது முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டு என்பதில் இருந்து வந்ததே. கோயிலாக இருந்தால் கலசவேள்வி என்போம். வீடுகளில் கூரையின் உச்சி விட்டத்தைப் பதிப்பதை கொண்டாட்டமாகவோ சடங்காகவோ கருதினால் முகட்டு வேள்வி என்றும் சொல்லலாம். முகடு > மோடு. முகடுபொருத்து என்பது நிகழ்ச்சியின் பெயராகவும் கொள்ளலாம். பொருத்து என்பது ஏவல் வினையாகவும் செயற்படும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படும். வெட்டு, குத்து, காட்டு (எடுத்துக்காட்டு)என்பன போல். --செல்வா (பேச்சு) 21:02, 6 மே 2017 (UTC)
- உதவிக்கு நன்றி, பயனர்:செல்வா.--Booradleyp1 (பேச்சு) 06:45, 7 மே 2017 (UTC)