பேச்சு:முடியுருக் குருதிச்சுற்றோட்டம்

முடியுரு என்றால் என்ன என்று முதலில் புரியவில்லை. இது முடிவுறு என்பது அன்று (இதுவும் பொருந்தும் கீழே பார்க்க). இதயமே மற்ற எல்லா இடங்களுக்கும் இரத்தம்/குருதி வழங்குகின்றது. இது இதயத்துக்கே, இதயத்தின் இயக்கத்துக்கே இது இரத்தம்/குருதி தருவதால் முடியுரு என்று பெயரா என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது ஆக்ஃசுபோர்டு கூறுவது போல coronary <Latin corōnāri-us of or pertaining to a crown < corōna crown என்றாயிற்று என்று. இக்குருதிக் குழாய்கள் முடி/மகுடம்/கிரீடம் என்னும் பொருளில், இதயத்தைச் சூழ்ந்து மூடி முடி/மகுடம் போல் இருப்பதால் முடியுரு என்று பொருள் பெற்றது என. தன்னால் (இதயம்) பிற பகுதிகள் குருதி பெறுகின்றன, ஆனால் தனக்கே (இதயத்துக்கே), தன்னியக்கத்துக்கே குருதி வழங்கும் இவ் அமைப்பு வியப்பளிக்கின்றது. மருத்துவர்கள் இதனைச் சற்று விளக்கிச்சொன்னால் நன்றாக இருக்கும். இது முடிவடையும் சுற்றோட்டக் குழாய் அமைப்புகள் (ஆங்கில விக்கியில் 'The coronary arteries are classified as "end circulation"..') என்பதாலும் முடியுரு (சுற்றோட்டம் முடிவடையும் குழாய் அமைப்பு??) எனலாமா? இருபொருளும் பொருந்துமாறு முடி என்று தமிழில் அமைந்திருப்பது அருமை என நினைக்கின்றேன் :) --செல்வா (பேச்சு) 07:57, 3 மார்ச் 2012 (UTC)

தங்கள் வினாவுக்கு கட்டுரை மூலம் விடையளித்துள்ளேன் முடிவுறுத் தமனி பார்க்க.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:50, 3 மார்ச் 2012 (UTC)
மிக அருமை செந்தி!! மிக்க நன்றி!--செல்வா (பேச்சு) 15:27, 3 மார்ச் 2012 (UTC)

Start a discussion about முடியுருக் குருதிச்சுற்றோட்டம்

Start a discussion
Return to "முடியுருக் குருதிச்சுற்றோட்டம்" page.