பேச்சு:முண்மூலிகைக் குடும்பம்

இத்தலைப்பு தவறான புணர்ச்சியுடன் ஆக்கப்பட்டுள்ளது. முள் + மூலிகை = முண்மூலிகை என ஆகும். முட்மூலிகை என ஆகாது. நிலைமொழியில் ளகர ஒற்று வந்து வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் அந்த ளகரமானது ணகரமாக மாறும்.[எடுத்துக்காட்டாகப் பார்க்க- சொ.பரமசிவம், நற்றமிழ் இலக்கணம், பல்லம் 378] எனவே தலைப்பை மாற்றுகின்றேன்.--செல்வா (பேச்சு) 18:40, 26 பெப்ரவரி 2017 (UTC)

முட்புதர் என்பதன் இலக்கண அமைவுகளையும் அறிய ஆவல். விளக்கம் தரக் கோருகிறேன்..--உழவன் (உரை) 00:44, 27 பெப்ரவரி 2017 (UTC)
  • முட்புதர் (முள் + புதர்), மட்கலம் (மண் + கலம்) முதலியவற்றில் ளகர, ணகர ஒற்றை அடுத்துவரும் எழுத்து வல்லினம். அப்பொழுது ள், ண் > ட் ஆகும்.--செல்வா (பேச்சு) 01:00, 27 பெப்ரவரி 2017 (UTC)
நீச்சல்காரனின் கருவியைப் பயன்படுத்தி முட்மூலிகையை அமைக்க முயன்றேன். (@Neechalkaran: இயலவில்லை.) மனநிறைவு இல்லாமையால், பொதுவன் அய்யா அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதினேன். அவர் கவனிக்கவில்லை. தற்போது உங்களது விளக்கத்தால், மனநிறைவு அடைந்தேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, அக்கருவியினை மேம்படுத்த ஆய்வறிக்கை எழுதுங்கள். அது பலருக்கும், காலஎல்லையில்லா பலனைத் தரும்.--உழவன் (உரை) 02:33, 27 பெப்ரவரி 2017 (UTC)

Start a discussion about முண்மூலிகைக் குடும்பம்

Start a discussion
Return to "முண்மூலிகைக் குடும்பம்" page.