பேச்சு:முதனி
அரிங்கு, உகிர் என்றால் என்ன? திரட்சி வடிவு என்றால் 3D வடிவா? சுருக்கமான நல்ல ஆர்வமூட்டும் கட்டுரை செல்வா. இது போன்ற கட்டுரைகளை எழுதித் தரவாவது நீங்கள் அடிக்கடி வந்து போக வேண்டும். முதனி, முதனியறிஞர்கள் போன்ற சொல்லாடல்கள் அருமை. --Ravidreams 22:09, 13 நவம்பர் 2006 (UTC)
- ரவி, உகிர் என்பதற்குப் பொருள் நகம். --சிவக்குமார் \பேச்சு 17:17, 6 ஜனவரி 2009 (UTC)
- ரவி, மன்னிக்கவும், இதனை நான் முன்னமே பார்க்கவில்லை. அரி என்றால் சிறியது என்று பொருள். பெரு நெல்லிக்காய், அரி நெல்லிக்காய் என்று கேள்விப்பட்டிருக்கலாம். அரிசி என்பதும் சிறியது என்னும் பொருள் கொண்டது. அரி என்றால் மஞ்சள், பழுப்பு, செம்பழுப்பு நிறம் என்னும் பொருள்களும் உண்டு. அரி என்னும் சொல்லுக்கு 100 பொருட்களுக்கும் மேல் உள்ளன! நெல்லின் நிறம் பற்றியும் அரி என்று வந்திருக்கலாம் (நெல்லின் நிறம் அரி என்பதுதான்). அரிய என்றால் அருகி இருப்பது (குறைவாக, சிறிய அளவாக) இருப்பது என்று பொருள் படும். மலிவு என்பது பெருகி நிரைய இருப்பது. தென் அமெரிக்கக் குரங்குகள் சிறியதாக அணில், எலி போன்று இருக்கும். ஆகவே அரி+குரங்கு = அரிங்கு என்று ஆண்டேன் (சிறிய குரங்கு வகை). முத்திரட்சி என்றால் முத் திசைகளில் (மூன்று செங்குத்தான திசைகளில்) திரண்டு (பருமை) உடையது என்னும் பொருள். எனவே முத்திரட்சி என்பது முப்பரிமாணம் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல். --செல்வா 18:12, 6 ஜனவரி 2009 (UTC)
விளக்கத்துக்கு நன்றி, செல்வா--ரவி 04:10, 7 ஜனவரி 2009 (UTC)
குமுகப் பண்பு
தொகுஆரி ஆர்லோ (ஃகாரி ஃகார்லோ, Harry Harlow) இரீசசுக் குரங்குகளை ஆய்வு செய்து எழுதியிருந்தாலும், தாய்மைப்பண்பு என்பது முதனிகள் அல்லாத விலங்குகளிலும் (மாடு, மான், யானை..) மிகப்பெரிதும் காணலாம். ஆகவே இது பற்றிய கூற்றை இன்னும் சற்றுக் கூர்மை/துல்லியப் படுத்தவேண்டும் என்று நினைக்கின்றேன். சேர்ந்து வாழும் பண்பு எறும்புகள், தேனீக்ககளிடையேயும் உண்டு. நல்ல கருத்துகளைச் சேர்த்திருக்கின்றீர்கள் நன்றி. --செல்வா (பேச்சு) 14:31, 20 சூலை 2013 (UTC)