பேச்சு:முலாம்பழம்

Rock melon? --~AntanO4task (பேச்சு) 02:18, 17 சனவரி 2017 (UTC)Reply

@Neechalkaran: நண்பரே! இது மொலாம் பழம் என்று அழைக்கப்படும் பழம் தானே?--உழவன் (உரை) 04:52, 21 பெப்ரவரி 2017 (UTC)

இது en:Honeydew (melon) ஆக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:54, 21 பெப்ரவரி 2017 (UTC)
அல்ல. ஒரு வழியாகக் கண்டறிந்தேன். இது தமிழகத்தில் muskmelon என்று அழைக்கப்படுகிறது.[1] தமிழில் கிர்ணிப் பழம் என்றும் அழைப்பதாக நண்பர் கூறினார். திரினிப் பழம் தான் கிர்ணிப்பழம் என்று அழைக்கின்றனரோ என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் மாவட்டத்தில் முலாம் பழம், மொலாம் பழம்[2] என்றே அனைத்தையும் அழைக்கின்றனர். தாவரவியல் அடிப்படையில் தற்போது பல கலப்பினங்கள் உள்ளன. அதற்கொப்ப இறுதிப்பெயர் மாறும் Cucumis melo var. .... --உழவன் (உரை) 11:46, 28 பெப்ரவரி 2017 (UTC)

@AntanO: சான்றுகளுடன் திரினிப்பழத்திற்குரிய தாவரவியல்(Cucumis melo) பெயரைத்தந்துள்ளேன். என்ன மாற்றங்கள் செய்து விக்கித்தரவில்லாதவை என்ற வார்ப்புருவை நீக்க வேண்டும். விக்கித்தரவு உருப்படி இருந்தும், விக்கித்தரவில்லாதவை வார்ப்புரு இருப்பது பொருத்தமாகப் படவில்லை என்பதால் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.--உழவன் (உரை) 03:27, 10 மார்ச் 2017 (UTC)

இக்கட்டுரை en:Melon என்பதனுடன் அல்லது en:Muskmelon என்பதனுடன் பொருந்துகிறதா? --AntanO 03:44, 10 மார்ச் 2017 (UTC)
இக்கட்டுரை en:Muskmelon என்பதே. Melon என்பதில் இருந்து இது பிரிந்துள்ளது. Muskmelon என்பதன் பல தாவரவியல் பெயர்களை ஆங்கில விக்கியின் தகவற்பெட்டியில் காணலாம். அவற்றில் இருந்து, இந்திய இனங்கள் தோன்றியது எனலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, மேற்கூறிய Cucumis meloஎன்பதிலும் பல கலப்பினங்கள், வகைகள் உள்ளன.எனவே, அதுவும் பொதுப்பெயர் ஆகும். ஆய்வு அடிப்படையில் கூர்வது நமது நோக்கமல்ல. அது என்னாலும் இயலாது. அது முச்சொல்லுடன் இருக்கும். அதாவது Cucumis melo var ---இந்த மூன்று கோட்டில் கலப்பினப் பெயர் அல்லது வகையினப் பெயரை எழுத வேண்டும். விக்கித்தரவில் பல முப்பெயர்கள் இருப்பதாலும், தமிழ் பெயரும் பொதுவான இருபெயர் என்பதாலும், Cucumis melo என்ற விக்கித்தரவு பக்கம் உள்ள இருபெயரில் இணைப்பதே பொருத்தமாகும். --உழவன் (உரை) 08:29, 10 மார்ச் 2017 (UTC)
  1. http://agritech.tnau.ac.in/success_stories/pdf/2010/horticulture/Growing%20muskmelon.pdf
  2. http://simpleindianrecipes.com/fruits.aspx
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முலாம்பழம்&oldid=2664430" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முலாம்பழம்" page.