பேச்சு:மு. கா. சித்திலெப்பை

மு. கா. சித்திலெப்பை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மு. கா. சித்திலெப்பை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையின் நடை கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாமல் இருக்கின்றது; மேலும், ஏதோ ஒரு பத்திரிகையிலிருந்து வெட்டி ஒட்டியுள்ளது போல் தெரிகின்றது. இது விக்கிக் கொள்கைக்கு ஒவ்வாதது. --பரிதிமதி 18:06, 4 மார்ச் 2010 (UTC)

முரண்பாடு

தொகு

//ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலான அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியவர்.// என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

ஆனால் இங்கோ : அசன்பே சரித்திரம்

இவ்வாறு உள்ளது:

//அசன்பே சரித்திரம் என்பது 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது. இதை இலங்கை எழுத்தாளர் முகம்மது காசீம் சித்தி லெப்பை என்பவர் எழுதினார்.//
அறிந்தவர்கள் முரண்பாடற்றவாறு மாற்றவேண்டுகின்றேன். --சி. செந்தி 00:26, 18 பெப்ரவரி 2011 (UTC)
ஈழத்தின் முதல் நாவல், தமிழின் இரண்டாவது நாவல், முரண்பாடு உள்ளது போல் தெரியவில்லையே. --Natkeeran 00:27, 18 பெப்ரவரி 2011 (UTC)
அசன்பே சரித்திரம் - எழுதப்பட்டுள்ளது ஈழத்தில் என்று நோக்கினால் முரண்பாடாகும்; உலகத்தில், தமிழில் என்று நோக்கினால் அந்த உரையே பொய்க்கின்றது.
  • தகவலுக்கு: கி.பி.1879-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழில் எழுந்த முதல் புதினமாகும். இரண்டாவது தமிழ்ப் புதினம் பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் என்பதாகும் (கி.பி.1896). மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது ; பெண் கல்வியை

வலியுறுத்துவது. ஆதாரம்: http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031113.htm

வாழ்வியற் களஞ்சியத்தில் அசன்பே சரித்திரமே இரண்டாவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டு ஆண்டைக் கண்டறிந்தால் உதவும். --Natkeeran 01:12, 18 பெப்ரவரி 2011 (UTC)
  • தமிழில் வெளியான புதினங்களைக் கால வரிசைப்படுத்துவதில் பெரிய குழப்பம் நிலவுகிறது. கீழ்வரும் இணைப்பைக் காண்க:

Modern Indian Literature, An Anthology, Volume 1 Surveys and Poems by K. M. George (Jun 1, 1992), pp. 382-383. --பவுல்-Paul 02:14, 18 பெப்ரவரி 2011 (UTC)

Return to "மு. கா. சித்திலெப்பை" page.