பேச்சு:மெட்ரோஜெட் விமானம் 9268
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது. |
டகர மெய்யை அடுத்து ரகரம் வருவது பிழை. மெட்ரோ என்று எழுதுவது இலக்கணக் குற்றம். அதனால் குறைந்த பட்சம் அதுவேனும் சரியாக இருக்கட்டுமேயென்று நகர்த்தியதை ஏன் மீண்டும் முன்னிருந்தவாறு மாற்றப்பட்டுள்ளதென்பது புரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 04:08, 1 நவம்பர் 2015 (UTC)
- மெட்ரோ என்பதே தமிழக வழக்கு. மெற்றோ என்பதை எவ்வாறு உச்சரிப்பது? Metto என்றா?--Kanags \உரையாடுக 04:57, 1 நவம்பர் 2015 (UTC)
பெற்றோர் என்பதை pettar என்றா உச்சரிக்கிறீர்கள்? கற்றோர் என்பதை kattor என்றா உச்சரிக்கிறீர்கள்? நான் இங்கே தமிழக வழக்கு, இலங்கை வழக்கு என்றெதுவும் கூறவில்லை. எல்லோருக்கும் பொதுவான இலக்கணத்தைக் கூறினேன். அது தவறா?--பாஹிம் (பேச்சு) 05:16, 1 நவம்பர் 2015 (UTC)
- Metro - மெட்ரோ, Petrol - பெட்ரோல், பெட்ரோலியம் எனத் தமிழ்நாட்டினர் எழுதுவது தவறென்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 05:26, 1 நவம்பர் 2015 (UTC)
மெட்ரோ என்று எழுதுவது இலக்கணக் குற்றம்.--பாஹிம் (பேச்சு) 13:32, 1 நவம்பர் 2015 (UTC)