பேச்சு:மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு

உரை திருத்தம்

தொகு
  1. இக்கட்டுரையில் நான் செய்துள்ள உரைத்திருத்தம் பற்றிய குறிப்பு. வட இந்திய இசையில் "சுர்" (sur) என்றும் தமிழில் சுரம் என்றும் இருப்பதை ஸ்வரம் என்று எழுதியிருப்பதை மாற்றி சுரம் என்று எழுதியுள்ளேன். ஸ்வரம் என்னும் சமசுகிருதச்சொல் ஸ்வ என்னும் அடிப்படையாக தன்னில் தானே இனிமையாய் இருப்பது என்பது போல பொருள் கூறுவர். இப்படி வட இந்திய மொழிகளில் எழுத வாய்ப்பிருந்தும் அவர்கள் சுர் என்று எழுதுகிறார்கள். குழல்களில் சூட்டுகோலாக் துளையிட்டு ஒலி வேறுபாடுகள் எழுப்பினார்கள் என்னும் முகமாக முனைவர் வீ.பா.கா சுந்தரம் விரிவாக எழுதியுள்ளார். சுரம் என்பதே சரியான சொல். இந்தியா முழுவதிலும் வழங்கும் சொல். எனவே தமிழில் இதனைச் சுரம் என்றே எழுதுவது நல்லது. தமிழில் முறைவகுத்து வளர்த்த இசைமரபு 2200 ஆண்டுகளுக்கும் மேலானப் பெரு மரபு. சுரம் என்றே எல்லா இடங்களிலுமோ அல்லது பெரும்பாலான இடங்களிலோ எழுத பரிந்துரைக்கின்றேன்.
  2. மேலுள்ளது போன்ற பிற திருத்தங்களும் செய்திருக்கின்றேன். அதாவது பொதுவாக தமிழர்கள் எல்லோரும் படித்து விளங்கிக்கொள்ளுமாறு உள்ல நடையில் ("பொது நடையில்") எழுதுதல் நல்லது என்னும் நோக்கில் திருத்தங்கள் செய்துள்ளேன். கருத்து வேறுபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும். சமசுகிருத அடிப்படையான கலைச்சொற்களையும் நான் வரவேற்கிறேன், ஆனால் அளவுக்கு மீறிச் செல்லாமலும், கூடிய இடங்களில் பிறைக்குறிகளுக்குள்ளேனும் இணையான தமிழ்ச்சொற்களைத் தந்தேனும் நடுநிலை காக்க வேண்டுகிறேன். ஒருதலையாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
  3. இசை பற்றி எழுதிவரும் சிந்து, வாசு முதலானோர் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். தமிழின் உண்மையான செவ்விய இசை மரபுகள், கலைச்சொற்கள் காக்க வேண்டியன. இவை கடந்த 60 ஆண்டுகளாக சங்கீத சபாக்களால் ஒருதலையாக திரிக்கப்பட்டுவருகின்றன.அண்மையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுள்ளது, எனினும் இன்னும் கொடுமைகள் நிகழ்ந்தவண்னம் உள்ளன.

--செல்வா 18:09, 17 டிசம்பர் 2008 (UTC)

  1. எப்பக்கத்தில் எப்படி எழுதபட்டிறுகிரதோ அதையே தொடர்ந்து நான் சேர்த்துள்ளேன். இந்த பங்களிப்பை தவிற மற்ற இராக பக்கங்களையும் பார்க்கவும். இந்த பக்கத்தின் மாற்றங்களையும் பர்க்கவும். அது மட்டுமல்லாமல், மற்ற மொழி சொற்களை நான் சேற்பது குறைவு என்று எண்ணுகிறேன்.
  2. கட்டை என்றால் Octave என்று பொறுளா? ஸ்தாயி என்றால் Octave என்று பொறுள். நான் தெரிந்துகொன்ட வறை ஒரு கட்டை என்றால் C யில் துவக்கம், இரண்டு கட்டை என்றால் D யில் துவக்கம். ஆறு கட்டை என்றால் A வில் துவக்கம். கொஞ்சம் தெளிவு செய்யவும். இது கேள்வி ஞாணமே (ஓஹோ ஸமஸ்க்ருதம் வந்துவிட்டதோ).

-- வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 05:40, 18 டிசம்பர் 2008 (UTC)

  1. ஆம் வாசு, நான் பார்த்திருக்கின்றேன், நீங்கள் மேலே 1) இல் கூறியபடித்தான் பங்களித்திருக்கின்றீர்கள்.
  2. கட்டை என்பது பொதுவாக இரு பொருள்களில் பயன்படுகின்றது. ஆர்மோனியம் போன்ற கருவிகளில் ஒரு கட்டையைக் குறிக்கப் பயன் படுவது ஒரு பொருள். ஆனால் ஒரு கட்டையில் தொடங்கி ஒரு சுரத்தொடை முழுவதையும் சேர்த்தும் சுட்டும். எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் மூன்று கட்டையிலும் பாட வல்லவர் என்று கூறுவது உண்டு. மூன்றுகட்டை ஸ்தாயிலும் பாடவல்லவர் என்றும் கூறுவதுண்டு. இங்கே மூன்று கட்டை என்பது ஒரு ஸ்தாயியில் உள்ள சுரங்களின் கட்டுதலை, கட்டையை (சேர்ந்து கட்டிய சுரக்கோவையைக்) குறிக்கும். ஒருவன் ஏழரை கட்டையில் கத்துகிறான் என்று கூறும்பொழுது ஆர்மோனியத்தில் உள்ள ஒரு சுரத்தைச் சுட்டும் கட்டை என்னும் பொருளில் ஆளப்படுகின்றது. ஆனால் அவளுடைய குரல் இரண்டு கட்டைக்கு மேல் போகாது என்னும் பொழுது இரண்டு ஸ்தாயிக்கு மேல் போகாது என்று பொருள். குரல் வளம் இரண்டரை கட்டையாவது இருக்க வேண்டும் என்பது இப்படிப்பட்ட சொல்லாட்சிகள். எனவே கட்டை என்பது இங்கு இரு பொருளில் ஆளப்படும் ஓர் சொல். கட்டை என்பது "சரீரம்" என்னும் பொருளிலும் ஆளப்படும். சரீரம், சாரீரம் என்னும் சொல்லாட்சிகளையும் காண வேண்டுகிறேன். கட்டை என்பது சேர்ந்து கட்டப்பட்டது (கட்டு--> கட்டை) என்னும் பொருளில் ஆள்வதும் உண்டு. எனவே சுரத்தொடையைக் கட்டை என்றும் கூறுவதுண்டு. சமசுகிருதம், ஆங்கிலம் என்று பல மொழிச் சொற்களும் வந்து கலப்பது இயற்கை. அது பற்றி கவலைப்பட வேண்டாம், ஆனால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும், ஒரு மொழியின் உள்ளிசைவு, உட்பொருள், உட்தொடர்பு கெடும் என்று சிலர் கருதுகிறார்கள். ஞானம், ஞானி என்பன தமிழில் வழங்கும் தமிழ்ச்சொற்கள் (எம்மொழியில் இருந்து வந்திருந்தாலும்). சமசுகிருதத்தை போற்றி, வளர்த்து எடுத்தவர்களில் தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. ஒருசிலர் சமசுகிருதத்தை உயர்வாகவும், தமிழைத் தாழ்வாகவும் எண்ணியும் பேசியும் வருவதால், பல காலமாக தமிழ்-சமசுகிருத பிணக்குகள் உண்டு. அளவிறந்து சமசுகிருதமோ, ஆங்கிலமோ, அரபு மொழியோ என்று பிறமொழிகள் கலந்து எழுதுவதைச் சிலர், சில நேர்மையான காரணங்களுக்காக, எதிர்க்கின்றனர். கலப்பே வேண்டாம் என்பது அல்ல அவர்கள் நிலைப்பாடு.

--செல்வா 16:26, 21 டிசம்பர் 2008 (UTC)

Return to "மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு" page.