பேச்சு:மொழியின் தோற்றம்

மொழியின் தோற்றம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

முக்கியமான ஒரு கட்டுரை எழுதி வருகின்றீர்கள் மயூரநாதன், பாராட்டுகள். Hominidae (anglicized hominids) என்பதை நாம் ஓமினிடு, ஓமினிடுகள் என்றே எழுதலாம். இத்தாலிய மொழியில் ominidi என்கின்றார்கள். சொல்லுவதற்கும் எளிதானது. ஓமோ சாப்பியன், ஓமினிடு என்று எழுதுவதால் தவறில்லை. முதனி வரிசையிலுள்ள மேல்குடும்பமாகிய ஓமினோய்டீ (Hominoidea), குடும்பமாகிய ஓமினிடே (Hominidae), துணைக்குடும்பபாகிய ஓமினினே, குடும்பக்கிளையாகிய ஓமினினி, குடும்பத் துணைக்கிளையாகிய ஓமினினா ஆகியவற்றை சீராகக் குறித்தால் போதும். ஓமினிடே (Hominidae) என்பதை இடாய்ச்சு மொழியில் Die Menschenaffen என்கின்றனர். முன்னர் இதே குடும்பத்தை Pongidae (போங்கிடே) என்றனர் (ஆங்கிலத்திலும்). Menschenaffen என்னும் சொல்லின் பொருள் மக்கள் அல்லது மாந்தர்கள் (Menschen) அதற்கு மேலுள்ள முன்னுள்ள (affen) ஓரினம் என்பது போன்றதே. மேல்குடும்பப் பெயரான ஓமினோய்டீ (Hominoidea) என்பதனையும்கூட இடாய்ட்சு மொழியாளர் Menschenartige என்கிறார்கள். வருங்காலத்தில் தக்க மொழிபெயர்ப்புகள் உடனுக்குடன் நிகழும் (பேசப் பேசக்கூட நிகழவாய்ப்புள்ளது), ஆகவே நமக்குப் புரியுமாறு நமக்கு உகந்த வகையில் இருப்பதே முதன்மையானது என்பது என் கருத்து. இடாய்ட்சு மொழியில் H (ஃகெச்) ஒலி உண்டு, எனினும் அவர்கள் Menschenartige, Menschenaffen என எழுதுகிறார்கள் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

  • superfamilia = Hominoidea = முன்மாந்த மேற்குடும்பம்
  • familia = Hominidae = முன்மாந்தக் குடும்பம்
  • subfamilia = Homininae = முன்மாந்த உட்குடும்பம் (/துணைக்குடும்பம்)
  • tribus = Hominini = முன்மாந்தக் கிளை
  • subtribus = Hominina + முன்மாந்த உட்கிளை
  • மேலுள்ளவை பொதுவான என் பரிந்துரைகளே. எடுத்து ஆளவேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. கருதிப்பார்க்க இங்கு இடுகின்றேன்.

--செல்வா 18:00, 13 பெப்ரவரி 2010 (UTC)


செல்வா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். ஓமோ சாப்பியன், ஓமினிடு என்று மாற்றிவிடுகிறேன். மயூரநாதன் 19:38, 13 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி மயூரநாதன். --செல்வா 19:47, 13 பெப்ரவரி 2010 (UTC)

Start a discussion about மொழியின் தோற்றம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மொழியின்_தோற்றம்&oldid=825370" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மொழியின் தோற்றம்" page.