பேச்சு:யாவாக்கிறிட்டு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic தலைப்பு திருத்தம்
தலைப்பு திருத்தம்
தொகுஇந்த பக்கத்தினை ஜாவாஸ்கிரிப்ட் என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். ஒரு மொழியின் பெயர் நமது மொழிக்கேற்ப இல்லை என்பதற்காக அதன் பெயரை நாம் மாற்றக்கூடாது.சங்கர் வையாபுரி (பேச்சு) 12:25, 12 சூன் 2012 (UTC)
- அவ்வாறு கூறமுடியாது. ஆங்கிலத்தில், யாழ்ப்பாணம் Jaffna ஆகவும் மட்டக்களப்பு Batticaloa ஆகவும் தூத்துக்குடி Tuticorin என அம்மொழியின் விதிக்கேற்ப மாறியுள்ளன. அதே போல நம் தமிழ் மொழியின் விதிக்கேற்பவே திசைச் சொற்களை ஏற்க வேண்டும். எம்மொழியாக இருப்பினும் அம்மொழியின் இலக்கண விதிக்கேற்பவே சொற்களை ஏற்றுக் கொள்தல் வழமை. மேலும் ஜகரமும் ஸகரமும் தமிழ் எழுத்துகளா சங்கர் வையாபுரி? --மதனாகரன் (பேச்சு) 14:06, 12 சூன் 2012 (UTC)
- இந்த கட்டுரையின் நோக்கம் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு எளிய முறையில் ஜாவாஸ்க்ரிப்ட் மொழியை அறிமுகபடுத்துவது தானே?? அல்லது நம் மொழி சுத்தத்தை நிரூபிக்கும் நோக்கமா? ஜாவாஸ்க்ரிப்ட் மொழியை பற்றி தமிழில் அறிந்து கொள்ள விரும்பும் யாரும் 'யாவா ஸ்கிரிப்ட்' என்று தேடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆக இக்கட்டுரை தன் பயனை இழந்து இங்கு இருக்கிறது. :( --Tamizhgeek (பேச்சு) 18:52, 9 ஆகத்து 2012 (UTC)
இக்கட்டுரை ஒன்றும் பயனை இழக்கவில்லை. ஜாவாஸ்க்ரிப்ட் என்ற வழிமாற்றும் இக்கட்டுரைக்கு உண்டு. --மதனாகரன் (பேச்சு) 03:13, 10 ஆகத்து 2012 (UTC)
- யாவாசிகிரிப்டு என்பது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை
போர்த்துகீசத்ஒல்லாந்தரின் தாக்கமாக இருக்கலாம். தமிழில் சாவாசுக்கிரிட்டு என்றால் ஒலிப்பு நெருக்கம் இருக்கும். இலங்கை வழக்காக இருந்தால் மாற்றுவழி தரலாம். நிற்க. - சங்கர், யாரும் பெயரை மாற்றவில்லை, ஒலிபெயர்ப்பு (transcription) என்பது எந்த மொழியிலும் நிகழ்வதுதான். இல்லையென்றால் மூலமொழி எழுத்துக்களிலேயே எழுதிவிடலாமே? en:Exonym ((புறப்பெயர்) பற்றியும் படியுங்கள். இந்தியாவை ஏன் இந்தியா என்கிறோம், ja ஒலியே இல்லாத இடாய்ச்சுலாந்துக்காரர்களை ஆங்கிலத்தில் ஏன் Germans என்கிறார்கள், நிப்பானியர்களை ஏன் சப்பானியர்கள் என்கிறார்கள் எனப் புரியும். இதைப் பற்றி வேறு கட்டுரைகளில் பலமுறை உரையாடியிருக்கிறோம். விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு, விக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு, பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள், பகுப்பு:உச்சரிப்பு பற்றிய உரையாடல்கள், விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 1, விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு ஆகிய பக்கங்களை ஒருமுறை பாருங்கள். தேவைப்பட்டால் மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 04:18, 10 ஆகத்து 2012 (UTC)
- மதன் கூறியதும், சுந்தர் கூறியதும் சரியே. இலங்கையில் யகரம் இட்டுக்கூறுதல் வழக்கே. தமிழ் நாட்டிலும் யாக்கோபு (Jacob) என்று கூறும் வழக்கம் உண்டு. தமிழில் கீறுதல் என்றால் எழுதுதல் என்னும் பொருள் உண்டு. எனவே அது script என்பதோடு தொடர்புடையது. அதனை நினைவூட்டுவதாகவும் கொள்ளலாம். தமிழில் தலம் (ஸ்தலம்), தூண் (ஸ்தூண்) கந்தன் (ஸ்கந்த) என்று இருப்பது போல முதல் காற்ரொலி சகரத்தை (S) விட்டுவிட்டு எழுதலாம். script என்பதில் வரும் மெய்யொலிக் கூட்டத்தை விலக்கி தமிழில் எளிதாக முறைப்படி சாவாக்கிறிப்டு (chaavaakriptu) எனலாம் (தமிழில் -ப்டு- என்னும் மெய்யொலிக்கூட்டம் வராது ஆனால் உறழ்சியாகக் கொள்ளலாம் என்று கொண்டால் அப்படி எழுதலாம்). அல்லது சாவாக்கிறிட்டு என்று கூறலாம். சாவாக்கீறிட்டு என்பது தமிழ் கீறு-இட்டு என இருப்பதாகக் கொள்ள இடம் உண்டு. சாவாகிறிப்டு என்பதைப் பலரும் எளிதாக ஏற்பர் (பிழையுடையது எனினும்). ஆனால் சாவாகிறிட்டு என்றும் பிழையின்றி வழங்கலாம். மேலே கருத்துரைத்த சங்கரன், தமிழ்கீக் கேட்க வேண்டிய கேள்வி, நம் மொழிக்காக பெயரை மாற்றக்கூடாது எனில், பெயருக்காக மொழியின் அடிப்படையையே மாற்றக் கூடாது என்றும் மற்றவர்கள் சொல்லலாம் அல்லவா? உண்மையில் தமிழின் முறை எளிய முறை. எல்லோருக்கும் எளிதாக இருப்பது. சாவாக்கிறிப்டு என்றால் விளங்காது போகாது. வழிமாற்றுகள் தருவதால், தேடுபொறிகளில் சிக்கும். மேலும் -ட் என்று முடிந்தால் ஒலி வெளியே வரவே வர இயலாது. அதனை அடுத்து ஓர் உயிரொலி வந்தால்தான் "ட்:-இன் ஒலி கிட்டும்! Stop என்று எழுதலாம் ஸ்டாப் என்று கிரந்தம் கலந்தும் எழுதலாம், ஆனால் "ப்" என்று கூறுவதற்காக மூடிய இதழ்கள் "ப்" ஒலியைத் தரவே தராது, அடுத்து ஓர் சிறு உயிரொலி வராவிடில். எனவேதான் இசுடாப்பு என்று எழுதுவது இயல்பானது. அதில் வரும் முதல் இகரமும், கடைசியில் வரும் உகரமும் (பு) மிகச்சிறியதே. மிகவும் சரியாக prosthetic vowel+ Stop + short vowel (or shva) என்பதே இயல்பானது (தமிழ் இலக்கணம் என்பதால் அன்று, உண்மையிலேயே இயல்பான ஒலிப்பு இது). --செல்வா (பேச்சு) 05:02, 10 ஆகத்து 2012 (UTC)
- சரியாகச் சொன்னீர்கள் செல்வா. வடமொழியில் shva என்ற குறுக்கம், ஆங்கிலத்தில் en:Elision, தமிழில் குற்றியலுகரம் என்பது இயல்புமுறைதானே ஒழிய ஏதோ திணிப்பு அல்ல என உணர வேண்டும். அதே போல் எசுப்பானியத்தில் முன்னால் எகர உயிரொலி கட்டாயம் வருவது, பஞ்சாபியில் இசுத்திரி என்பது, வட இந்தியா முழுவதும் தெள்ளத் தெளிவாக இசுக்கூல் என்பது எல்லாம் இயல்பே. -- சுந்தர் \பேச்சு 06:07, 10 ஆகத்து 2012 (UTC)
யாவாக்கிரிட்டு என்றே கூறலாம். --மதனாகரன் (பேச்சு) 07:41, 10 ஆகத்து 2012 (UTC)
- நன்றி சுந்தர். மதன், யாவாக்கிறிட்டு என்றும் கூறலாம். கிறுக்குதல் (scribe, scribble). கீறுதல் (scribe, scripting, writing) ஆகியவற்றுடன் தொடர்புணர்த்தும். சாவாக்கிறிட்டு, சாவாக்கிரிட்டு, யாவாக்கிறிட்டு, யாவாக்கிரிட்டு ஆகிய நான்கில் ஒன்றை முதன்மைப்படுத்தலாம். --செல்வா (பேச்சு) 14:35, 10 ஆகத்து 2012 (UTC)
- இங்கே எசுப்பானிய மொழியில் யாவாக்கிறிட்டை அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் மொழிவழக்கத்தின் படி "Havaaascreept' என்று ஒலிப்பதைப் கேட்கலாம். இதே போல இடாய்ச்சு மொழியில் Yaavaascript என்று ஒலிப்பதையும் கேட்கலாம். --செல்வா (பேச்சு) 19:31, 20 ஆகத்து 2012 (UTC)
- அண்மையில் யாகூ நிறுவனத்தின் திறந்த ஆக்கர் நாளில் கலந்து கொண்ட போது சாவாக்கிறிட்டுடன் தொடர்புடைய Mojito என்ற நுட்பத்தைப் பற்றி விளக்கினார்கள். அதிலும் கூட எசுப்பானிய ஒலிப்பான மொஃகீத்தோ என்றே பயன்படுத்தினார்கள். (அதைப் பற்றிய மற்றொரு அலுவல்சார் படத்தில் தெளிவாகக் கேட்கலாம்.) யாரும் அவ்வாறு ஒலிப்பதைக் கேட்டு குழம்பவில்லை. -- சுந்தர் \பேச்சு 08:22, 22 ஆகத்து 2012 (UTC)
- மிக்க நன்றி சுந்தர்!! மிகச் சரியான எடுத்துக்காட்டு, அதுவும் ஆங்கிலத்தில்! ஏன் San Jose என்பதை ஃசான் ஃகொசே என்று சொல்வதைக் கேட்டிருப்பார்களே! --செல்வா (பேச்சு) 22:06, 22 ஆகத்து 2012 (UTC)
- இங்கே எசுப்பானிய மொழியில் யாவாக்கிறிட்டை அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் மொழிவழக்கத்தின் படி "Havaaascreept' என்று ஒலிப்பதைப் கேட்கலாம். இதே போல இடாய்ச்சு மொழியில் Yaavaascript என்று ஒலிப்பதையும் கேட்கலாம். --செல்வா (பேச்சு) 19:31, 20 ஆகத்து 2012 (UTC)