பேச்சு:யோகாசனம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

யோகக் கலை என்ற பெயரில் இவர் யோகாசன உடற்பயிற்சி பற்றிய விளக்கங்களை தந்துள்ளார். யோகாவில் உடற்பயிற்சி அல்லாத மற்ற முறைகளும் இருப்பதால், யோகக் கலை கட்டுறை வேறு தலைப்பில் தனிக்கட்டுரையாக இருப்பது சரி என எனக்கு தோன்றுகிறது. ஆசனம் அல்லது யோகாசனம் போன்ற தலைப்புகள் பொருத்தமாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் 05:54, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தனிக் கட்டுரையாகவே இருக்கலாம். அதற்கேற்ப முதற் பந்தி மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசனம் என்பதை முதன்மைப் படுத்தி எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:46, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply

முதற் பத்தி மாற்றி எழுதப்படும். சிறிது எளிய விளக்கங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் மாற்றி எழுதிவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 09:10, 3 செப்டெம்பர் 2011 (UTC)Reply

யோகம் வேறு, ஆசனம் வேறு, யோகாசனம் வேறு. தமிழில் ஓகம் என்பது யோகம். योग (= யோக3 என்பது சமற்கிருத மொழியில் யுச்3 என்பதில் இருந்து பிறந்தது என்பர் (பார்க்க மோனியர் வில்லியம்சு சமற்கிருத அகராதியை, " योग [p= 856,2] [L=172324] m. ( √1. युज् ; ifc. f(आ).) the act of yoking , joining , attaching , harnessing , putting to (of horses) RV. MBh.". தேவநேயப்பாவாணர் ஓகம் என்பது தமிழ்ச்சொல், அதில் இருந்துதான் யோக வந்தது என்பார். தமிழில் ஓகம் என்றால் கூட்டம், ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து ஒன்றை உருவாக்குதல். ஒக்க என்றால் ஒன்றாய் இருத்தல், உடன் இருத்தல். ஆசனம் என்றால் அமர்தல். ஆசனவாய் என்பது மலங்கழியும் துளை. ஆசனம் என்றால் இருக்கை (அமர்ந்திருக்கும் நாற்காலி), சிம்மாசனம் (அரசுக்கட்டில்). உள்ளம் ஒன்றுபட உடலும் உள்ளமும் ஒன்றி நிற்கவும் அதில் உய்த்து நிற்கவும் உகந்த இருக்கை நிலைகள் ஆசனம், யோகாசனம். --செல்வா 04:04, 16 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யோகாசனம்&oldid=1023260" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யோகாசனம்" page.