பேச்சு:ராஜ்சிவா
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
ராஜ்சிவா இவர் 2011-2012 இளைய இணைய சமுதாயத்தின் மத்தியல் கொடி கட்டிப் பறந்தவர் 2012 தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் கணித்த “மாயன் காலண்டரில் கூறியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உலக அழிவை ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக தமிழர்களுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்தவர் இவர் ஒரு தலை சிறந்த அறிவியல் எழுத்தாளர். இது போன்ற கட்டுரைகள் விக்கிபீடியாவில் பதியப்படும் போது ((delete )) என்ற வசனத்தை இடாது அந்த கட்டுரையை முடிந்த அளவு தரமுயர்த்த முயற்சி செய்வோம் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 20:38, 1 மே 2014 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 21:06, 1 மே 2014 (UTC)
- 1. வார்ப்புருவை நீக்குபவர்கள் முதலில் பேச்சுப் பக்கத்தில் உரையாடி விளக்கப்படுத்தவும். 2. குறிப்பிட்ட நபர் குறிப்பிடத்தக்கவரா என்பதை உறுதிப்படுத்தவும். 3. இதற்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் தேவையற்றவை. --AntonTalk 18:38, 5 மே 2014 (UTC)
- வணக்கம் அன்ரன், இந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் இணைய இதழ்களில் மட்டுமல்லாது, பிரபலமான (குறைந்தது) ஒரு பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன. அது மட்டுமல்லாமல், குறைந்தது இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. இவையே விக்கியில் இக்கட்டுரை இருப்பதற்குப் போதுமானவை. இதனால் உங்கள் notability வார்ப்புரு தேவையற்றது. நீக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 22:14, 16 மே 2014 (UTC)
- வணக்கம், இன்று இணையங்களில் எழுதுபவர்களும், நூல்களை வெளியிடுபவர்களும் பலர் உள்ளனர். விக்கி கட்டுரைக்கும் விக்கி தனிநபர் கட்டுரைக்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் அறிவீர்கள். பொதுவாக en:Wikipedia:Notability (people):குறிப்பிடத்தக்கவர் அடிப்படை அளவுகோள்களைக் கொண்டிருக்க வேண்டும். இக்கட்டுரை நூல்களுக்கு உசாத்துணையினைக் கொண்டுள்ளதேயன்றி நபருக்கல்ல. இரண்டாம் நிலைத்தரவு ஆசிரியரை குறிப்பிடத்தக்கவர் என காண்பிக்கவில்லை. இதே கட்டுரை ஆ.வி.யில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. --AntonTalk 03:59, 17 மே 2014 (UTC)
- //இதே கட்டுரை ஆ.வி.யில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.// அது குறிப்பிடத்தக்கதல்ல. நாளை இங்கு துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை நீக்கினால், அவர்களும் நீக்கிவிடுவார்களா என்ன? நீங்கள் ஆங்கிலக் கொள்கைகளை இங்கு கொண்டு வராதீர்கள். அப்படிப் பார்த்தால், துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை நீக்க நீங்கள் எதிர்ப்புத் தெரிவியுங்கள். அவர்கள் அங்கு வைத்திருப்பது notability உள்ள படியால் தானே? அவர்கள் அவற்றைக் கவனிக்கவில்லை என்றால் நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். ஒருவரை எழுத்தாளர் என்ற பகுப்புக்குள் இட வேண்டுமென்றால், முக்கியமாக அவரது எழுத்து சேவைகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவை இக்கட்டுரையில் இல்லையா? அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் வேண்டுமா என்ன? கிடைத்தால் யாரும் எழுதுவார்கள். பொதுவாக ஒருவர் இறந்த பின்னரே தனிப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும். இதுவே தமிழ் (அல்லது முழு இந்தியருக்குமா) சமூகத்திற்கும், ஏனையோருக்கும் உள்ள வேறுபாடு. அன்ரன், உங்களுடன் நான் கருத்தாட விரும்பவில்லை. நீங்கள் விதண்டாவாதம் புரிபவராக இருந்து எமது நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் என்பதை நான் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 05:55, 17 மே 2014 (UTC)
- நான் இங்கு குறிப்பிட்ட நபர் பற்றி மட்டுமே கருத்திட்டுள்ளேன். எனவே அதுபற்றி மட்டும் கலந்துரையாடுங்கள். ஏது விதண்டாவாதம்? நீங்கள் அதற்கு விதிவிலக்கானவரா? "விதண்டாவாதம் புரிபவராக இருந்து எமது நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் என்பதை நான் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்பதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன். --AntonTalk 06:03, 17 மே 2014 (UTC)
- //இதே கட்டுரை ஆ.வி.யில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.// அது குறிப்பிடத்தக்கதல்ல. நாளை இங்கு துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை நீக்கினால், அவர்களும் நீக்கிவிடுவார்களா என்ன? நீங்கள் ஆங்கிலக் கொள்கைகளை இங்கு கொண்டு வராதீர்கள். அப்படிப் பார்த்தால், துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை நீக்க நீங்கள் எதிர்ப்புத் தெரிவியுங்கள். அவர்கள் அங்கு வைத்திருப்பது notability உள்ள படியால் தானே? அவர்கள் அவற்றைக் கவனிக்கவில்லை என்றால் நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். ஒருவரை எழுத்தாளர் என்ற பகுப்புக்குள் இட வேண்டுமென்றால், முக்கியமாக அவரது எழுத்து சேவைகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவை இக்கட்டுரையில் இல்லையா? அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் வேண்டுமா என்ன? கிடைத்தால் யாரும் எழுதுவார்கள். பொதுவாக ஒருவர் இறந்த பின்னரே தனிப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும். இதுவே தமிழ் (அல்லது முழு இந்தியருக்குமா) சமூகத்திற்கும், ஏனையோருக்கும் உள்ள வேறுபாடு. அன்ரன், உங்களுடன் நான் கருத்தாட விரும்பவில்லை. நீங்கள் விதண்டாவாதம் புரிபவராக இருந்து எமது நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் என்பதை நான் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 05:55, 17 மே 2014 (UTC)
Anton, பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள் பக்கத்தில் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கமையை பற்றிய உரையாடல் நடைபெறுகிறது. அங்கும் உங்கள் கருத்துகளை இட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 06:07, 17 மே 2014 (UTC)