பேச்சு:ரெக்காவின் நெருப்பு
எனக்கு மிக பிடித்தமான ஒன்றை மொழி பெயர்த்துவிட்டேன். ஒட்டு மொத்த மாங்காவையும் தமிழில் மொழிபெயர்க்க ஆசை. அது ந்டக்காத்தால் அந்த மங்காவை குறித்த செய்திகளையாவது மொழி பெயர்த்துள்ளேன். யாராவது உதவி செய்ய முன் வந்தால் இதை தமிழில் வெளியிடலாம் :-( (இது எப்படியும் நடக்காத ஒன்று) வினோத் 18:06, 19 நவம்பர் 2007 (UTC)
ஜப்பானிய ஹிரகனாவில் 忍者 என்ற கன்ஜி எழுத்தினை にんじゃ என்றே எழுதுகின்றனர். எனவே நிஞ்சாவை விட நின்ஜா பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். மாற்றுக்கருத்திருப்பின் தெரிவிக்கவும். பொதுவழக்கு ஏதாவது இருப்பின் அதை பின்பற்றலாம் வினோத் 10:19, 20 நவம்பர் 2007 (UTC)
- நிஞ்சா தொடர்பில் தமிழில் பொதுவழக்கு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. nja என்பது வாசிக்கும்போது ஞ்சா என்றே ஒலிக்கிறது. எழுத்துக்கு எழுத்து ஒலிபெயர்க்க வேண்டியதில்லை தானே? நீங்கள் இவை தொடர்பில் தொடர்ந்து எழுதப் போவதால் அவ்வாறு மாற்றினேன். மங்கா, நிஞ்சா போன்றவை பற்றியெல்லாம் இப்பொழுதுதான் விரிவாக அறியமுடிகிறது. நிஞ்சா என்பது தமிழுக்கு இயல்பாக இருக்கும். இயல்பாக இருப்பவை இயல்பாக உள்வாங்கப்படுமல்லவா? கோபி 11:09, 20 நவம்பர் 2007 (UTC)
தமிழில் என்ன?
தொகுanime, episode, theme song, அத்தியாயம்? அத்தியாயம் = அதிகாரம் என்று சொல்வது கவிதை ஆக்கங்களுக்கே கூடுதல் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது. பாகம் என்று சொன்னால் அது part என்பதற்கு ஈடாக வழக்கில் இருக்கிறது. நூலின் அத்தியாயமும் தொலைக்காட்சித் தொடரின் episodeம் ஒத்த பொருள் உள்ளவை என்று நினைக்கிறேன். இதைப் பகுதி என்று சொல்லலாமா? ஆனால், இது பொத்தாம் பொதுவான சொல்லா இருக்கிறது. --ரவி 11:40, 20 நவம்பர் 2007 (UTC)
anime அனிமே தான். அது ஒரு கலாச்சரம். Life-Style, Culture. ஜப்பானிய அனிமேஷன் என்பதை அனிமே என குறிப்பிடுவர். எனவே ஜப்பானிய அனிமேஷன் அனிமே. அவ்வளுவு தான். மொழிப்பெயர்ப்பு செய்தால் அதன் தன் சுயத்தன்மையிழந்து பொலிவிழந்து போய்விடும். அதை மொழிப்பெயெர்த்தல் கடும் தவறு
எபிசோடு குறித்து தாங்கள் தான் கூறவேண்டும். தமிழக மெகா சீரியல்களில் என்னச் சொல் பயன்படுத்துகின்றன(குறிப்பு: நான் மெகா சீரியல் பார்ப்பது கிடையாது. நான் பார்ப்பதெல்லாம் அனிமேக்ஸ், இல்லையெனில் வேறேதேனும் ஒரு ஆங்கில சான்ல்). மெகா சீரியல்களில் பயன்படுத்தும் சொல்லை வேண்டும் என்றால் பயன்படுத்தலாம்
தீம் சாங்? நோ ஐடியா. வினோத் 12:16, 20 நவம்பர் 2007 (UTC)
- Theme song - கோவை, கோவைப் பாடல், கடுகம், உள்ளுறை பாடல் [1]
- Episode - கிளைக்கதை[2]
- -- Sundar \பேச்சு 09:06, 21 நவம்பர் 2007 (UTC)
episode = இதிகாசம்? --உமாபதி 12:14, 21 நவம்பர் 2007 (UTC)
epic = இதிகாசம் = காப்பியம்--ரவி 13:27, 21 நவம்பர் 2007 (UTC)
நன்றி சுந்தர். அகரமுதலிகளை மறந்து இங்கு கேட்டு விட்டேன் :) episodeன் உண்மையான பொருள் கிளைக்கதை தான் என்றாலும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இப்பொருள் எல்லா சமயங்களிலும் பொருந்துமா என்று தெரியவில்லையே? ஒரே சீரான கதையைக் கூட துண்டுத் துண்டாக சில வாரங்களோ நாட்களோ பகுதி பகுதியாக சொல்வது உண்டு தானே? பல episodeகள் கதையே இல்லாமல் நகரும் தொடர்களும் உண்டு :)--ரவி 10:15, 21 நவம்பர் 2007 (UTC)
- இவ்வகரமுதலிகளை நாம் தகுந்த இடங்களில் மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன்மூலம் இவற்றைப் பற்றிப் பலர் அறிந்துகொள்ள ஏதுவாகும். கிளைக்கதை என்பதற்குப் பதில் வேறு நல்ல சொல் கிடைக்காதவரை பகுதி அல்லது கதைப் பகுதி என்றே கொள்ளலாம். கதையே இல்லாமல் நகரும் தொடர் பற்றி சொல்லி சிரிப்பு வர வைத்துவிட்டீர்கள். :) -- Sundar \பேச்சு 10:31, 21 நவம்பர் 2007 (UTC)
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)