பேச்சு:லுட்விக் போல்ட்சுமான்

லுட்விக் போல்ட்சுமான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையின் தலைப்பு தமிழிலக்கணத்துக்கும் தமிழியல்புக்கும் புறம்பாக இருக்கின்றது. சப்பானியர்கள் ルートヴィッヒ・エードゥアルト・ボルツマン (Rūtovu~ihhi ēdo~uaruto Borutsuman) என்றும், கொரியர்கள் 루트비히 에두아루토 · 볼츠만 (luteubihi edualuto · bolcheuman) என்றும் சீனர்கள் 路德维格·爱德华·博尔兹曼 (Lù dé wéi gé·àidéhuá·bó ěr zī màn) என்றும் தங்களின் மொழியின் இயல்பின்படி வழங்குகின்றார்கள். தமிழில் தமிழிலக்கணத்தின்படியும் தமிழின் இயல்பின்படியும் இலூடுவிகு போல்சுமன் என்று எளிதாக இருந்தால் சரியாக இருக்கும். கொரியர்கள் bolcheuman என்றழைப்பதையும் சப்பானியர் Borutsuman என்றும் அழைப்பதைப் பார்க்கலாம் (சப்பானியத்தில் லகர கிடையாது). சீன மாண்டரின் மொழியில் bó ěr zī màn என்றிருப்பதையும் நோக்கலாம். ஒவ்வொருமொழிக்கும் ஒவ்வொரு அளவு மெய்ம்மயக்கமே இயல்பு. தமிழில் -ltz- என்பது மிகவும் கடினம். சப்பானியர் இடையே ஓர் உயிரெழுத்தை இட்டு (-ru-) எழுதியுள்ளதையும் பார்க்கலாம். தமிழில் வல்லின மெய்யெழுத்தில் ஒரு சொல் முடியலாகாது. இக்காரணங்களுக்காக தலைப்பை மாற்ற வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 08:23, 26 பெப்ரவரி 2020 (UTC)

Return to "லுட்விக் போல்ட்சுமான்" page.