பேச்சு:லேக் வலேசா

லெக் வலேசா என்பது சரியான உச்சரிப்பு.--Kanags \பேச்சு 11:38, 22 செப்டெம்பர் 2009 (UTC)Reply

இந்த ஒலிப்பைக் கேட்கவும். [[1]] --பரிதிமதி 16:25, 22 செப்டெம்பர் 2009 (UTC)Reply
என் காதுகளுக்கு லெஃக் வள்யேசா என்பது போல கேட்கின்றது. ஆனால் சரியான ஒலிப்பு லெஃக் வவேசா என்று இருக்க வேண்டும். போலந்திய எழுத்தொலிப்புகளை போலந்திய மொழி ஒலிப்புகள் என்னும் பக்கத்தில் காணலாம். போலந்திய மொழி எழுத்தாகிய ł (தலைப்பு எழுத்து (Ł)) என்பதை Voiced labio-velar approximant என்கின்றனர்; இதன் ஒலிப்பை ஆங்கிலத்தில் உள்ள way என்னும் சொல்லில் உள்ள w என்பது போல பலுக்க வேண்டும் என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற போலந்திய கவிஞர்-எழுத்தாளர் Czesław Miłosz அவர்கள் பெயரை இங்கு காட்டியுள்ளவாறு பலுக்குகிறார்கள். இதில் இருமுறை வரும் ł என்னும் எழுத்தொலிப்பைப் பாருங்கள். அனைத்துலக ஒலிப்புக் குறியீட்டில் -> [ˈt​͡ʂɛswaf ˈmiwɔʂ]. எனவே ł என்பதை ஏறத்தாழ தொண்டையொலியுடன் கூடிய வ என்பது போல ஒலிக்க வேண்டும். --செல்வா 20:38, 22 செப்டெம்பர் 2009 (UTC)Reply
எனக்கு ஒலிப்பியலில் அறிமுகம் கிடையாது. விக்கியில் உள்ளீடு செய்துவிட்டால் வல்லுனர்கள் திருத்தி சரிசெய்வார்கள் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லை. ஆங்கில உரையாடல் பக்கத்திலும் இவரது பெயர்பற்றி நீண்ட உரையாடலும் கருத்தெடுப்பும் நடந்துள்ளது. இங்கும் அனைவருக்கும் இணக்கமான தலைப்பினை தேர்ந்தெடுத்து மாற்றுமாறு வேண்டுகிறேன்.
ஓரளவுக்கு மூல மொழிக்கு நெருக்கமாக, அதே பொழுது தமிழ் மொழிக்கு ஏற்றவாறு இருந்தால் போதும். பலுக்கலில், எழுத்தொலிப்பில் மிகுதுல்லியம் பார்ப்பது வேண்டும் என்பதில்லை - இயன்றவறை துல்லியமாய், தமிழில் வழங்கும் இயல்புடன் இருந்தால் நல்லது. லேக் வாலேசா அல்லது சிறீதரன் கனகு சொன்னது போல லெக் வலேசா என்று இரண்டில் ஒன்று இருந்தால் போதுமானது என்பது என் கருத்து. மேலே நான் சொல்லியவை பொதுவாக போலந்திய மொழி ஒலிப்பில் ł என்னும் எழுத்தொலியை எவ்வாறு ஒலிக்கின்றார்கள் என்பது பற்றிய கருத்துகள்.--செல்வா 12:59, 23 செப்டெம்பர் 2009 (UTC)Reply
லெக் அல்லது லேக் இரண்டில் ஒன்று எனக்கு உடன்பாடே. ஆனால் வாலேசா என்பதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. தேவையில்லாமல் நீட்டி முழங்குகிறது:).--Kanags \பேச்சு 13:19, 23 செப்டெம்பர் 2009 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லேக்_வலேசா&oldid=508039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லேக் வலேசா" page.