பேச்சு:வட்டாரமொழி வழக்குகள்

வட்டார மொழிகள் என்பது வேறு கிளைமொழி என்பது வேறு. வட்டார மொழிகள் என்பது ஒரே மொழி பல்வேறு பகுதிகளில் சற்றே மாறுபட்டு வழங்கப்படுவது.எ.கா தமிழ் மொழியில் திருநெல்வேலி வழக்கு, கோவை வழக்கு, சென்னை வழக்கு என்பன. கிளை மொழி என்பது ஒரு மொழியிலிருந்து கிளைத்து (புதிதாக) மற்றொரு மொழியாக மாற்றம் பெறுவது. எ.கா தமிழிலிருந்து மலையாளம், கன்னடம் போன்றவை. கட்டுரையிலும் இக்கருத்துப் பிழை காணப்படுகிறது. இது கிளை மொழியைக் குறித்து எழுதப்பட்டதா? வட்டார மொழி குறித்து எழுதப்பட்டதா? குழப்பமாக உள்ளது.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:17, 9 மார்ச் 2012 (UTC)

முக்கிய கட்டுரைகள் பக்கத்தில் Dialect என்பது கிளைமொழி என தமிழாக்கப்பட்டிருந்தது. எனவே, அதனை அப்படியே விட்டிருந்தேன். மற்றபடி, வட்டார மொழி வழக்கு என்பது தான் dialectக்குப் பொதுவாகத் தமிழில் வழங்கும் பெயர். சீன, ஐரோப்பிய மொழிகளில் சில மொழிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது போல் இருக்கும். ஆனால், ஒரே எழுத்து முறையைப் பயன்படுத்தும். சீன மொழிகளில் சில வெவ்வேறு எழுத்து முறைகளைப் பயன்படுத்தும். ஆனால், தொடர்புடைய மொழிகளாக இருக்கும். வட்டாரம் சாராத மொழி வேறுபாடுகளை எவ்வாறு குறிப்பது? இது போன்ற ஐயங்களைத் தெளிவுபடுத்துவதாகக் கட்டுரை இருக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 20:39, 9 மார்ச் 2012 (UTC)

Start a discussion about வட்டாரமொழி வழக்குகள்

Start a discussion
Return to "வட்டாரமொழி வழக்குகள்" page.