பேச்சு:வரிசைமாற்றம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
வரிசைமாற்றம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Permutation என்பதற்கு வரிசை மாற்றம் என்னும் சொல்லாட்சி சரியானதாகப் படவில்லை. வரிசையமைப்பு அல்லது வரிசைவகுதி (வகுதி = design), அல்லது வரிசைக்கோலம் என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருத்தமான சொல்லோ வேண்டும். வரிசை மாற்றம் என்பது பொருந்தவில்லை. எத்தனை வெவ்வேறு வரிசையமைப்புகள் கொள்ளும்? எத்தனை வெவ்வேறு வரிசைக்கோலங்கள் கொள்ளும்? --செல்வா 13:52, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எத்தனை விதமாக வரிசைகளை மாற்றலாம் என்ற அர்த்தத்தில் வரிசைமாற்றம் என்ற சொல் உருவாக்கப்பட்டிருக்கலாம். வரிசைமாற்றம், சேர்மானம் ஆகிய சொற்கள் இலங்கையில் பயன்படும் கலைச்சொற்கள். தமிழக வழக்கு யாதென அறியேன். நன்றி. கோபி 14:04, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இது முதற்பக்கக் கட்டுரையாக இருப்பதால் சேர்மானம் மற்றும் இயலறிவியல் பற்றியும் தனிக் கட்டுரைகள் எழுதுவது நல்லது. (முதற்பக்கத்தில் இணைப்பு அறுபட்டு சிவப்பாகக் காட்சியளிப்பது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல).--Kanags 14:48, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி, தமிழ்நாட்டிலும் வரிசை மாற்றம், சேர்வு என்னும் சொற்களை ஆள்கின்றனர். என்ன பொருளில் ஆக்கியுள்ளார்கள் என்பது விளங்குகின்றது, ஆனால் அது பொருத்தமாயில்லை. தமிழ்நாட்டுப் பாடத்திலே 11 ஆவது வகுப்பு கணிதவியலில் (பக். 94):"பலமுறை வரும் பொருட்களின் வரிசை மாற்றங்கள்" (permutations of objects not all distinct). என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் விளங்குகின்றதா? இதனை "வேறுபாடுகளில்லா பொருட்களும் இருப்பின் கொள்ளும் வரிசை மாற்றங்கள்" என்றாவது சொல்லியிருக்க வேண்டும். எளிய சொற்களாகிய "அடுக்கம்" போன்றவற்றைக் கூட தேர்ந்திருக்கலாம். எத்தனை வெவ்வேறான முறைகளிலே அடுக்க முடியும்? --செல்வா 16:12, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரிசைமாற்றம்&oldid=810805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வரிசைமாற்றம்" page.