பேச்சு:வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கணிக்கப்பட்ட குறுக்கு வெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் (Computed tomography scan)

என்பதற்கு மாறாக வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி என்று குறிப்பிடலாம் என நினைக்கிறேன். மேலும் எக்ஸ் கதிர்கள் என்று பன்மையில் இருப்பது நன்றாக இருக்கும். இதனைத் தமிழில் புதிர்க் கதிர்கள் என்றும் கூறுவதுண்டு. புதிதாக இன்னதென்று அறியாமல் இருந்ததால், புது-->புதிர் (புரிய இடர் தருவது புதிர் - தீர்வு காண்பதில் இடரூட்டுவது புதிர்), புதிர்க் கதிர்கள் என்றனர். எக்ஸ் கதிர்கள் என்று இருப்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஒரு கருத்துக்காகச் சொன்னேன். --செல்வா 23:13, 7 டிசம்பர் 2007 (UTC)

பேச்சு வழக்காக, வரியோட்டம் செய்தார்களா? குறுக்குவெட்டு வரியோட்டப் படம் எடுத்தார்களா? என்று கேட்கலாம். நீங்கள் குறுக்குவெட்டு வரியோட்ட படத்துக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்றும் கேட்கலாம். பொதுமக்களுக்கு விளங்கும். --செல்வா 23:18, 7 டிசம்பர் 2007 (UTC)

செல்வா, உங்கள் பரிந்துரை எளிமையாக உள்ளது, பொருளும் சரியாக உள்ளது. இப்பக்கத்தை நீங்கள் மேலே தந்துள்ள தலைப்பிற்கு நகர்த்துவதில் எனக்கு உடன்பாடே. -- Sundar \பேச்சு 04:20, 10 டிசம்பர் 2007 (UTC)

Start a discussion about வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி

Start a discussion
Return to "வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி" page.