பேச்சு:வல்லம் மலைமேல் அய்யனார் கோயில்

வல்லம் தஞ்சாவூரை விட்டு சென்ற மக்கள்:

வல்லம் தஞ்சாவூரை விட்டு சென்ற ஒரு பகுதி மக்கள் : தொகு

ஆதி காலத்தில் வாழ்ந்த மக்களில் எம் முன்னோர்களும், வல்லம் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தனர்.எம் முன்னோர்கள் கரிகால சோழன் அமைத்த ஸ்ரீ மலைமேல் அய்யனார் கோயிலை வணங்கி வந்தனர். எம் முன்னோர்களை அய்யனார் கூட்டம் என்று குறிப்பிடுகிறது. அய்யனார் கூட்டமாக இருந்தாலும் எம் முன்னோர்கள் ராஜ ராஜ சோழனை தகப்பன் என்று வழிபட்டு வந்தனர். சோழர்களின் ஆதிக்கம் முடிந்த நிலையில் எம் முன்னோர்களுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் விளங்கவில்லை. அதனால் நம்மால் இங்கே வாழ முடியாது என்று கருதினர் அங்கிருந்து கிளம்பினார்கள், எதற்காக அங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. (அதற்கான சான்று பெரிதும் கிடைக்கவில்லை.) அங்கிருந்து வரும் பொழுது அவர்கள் மாட்டு வண்டியில் எல்லா பொருட்களையும் கட்டிக் கொண்டும், ஒரு கை பிடி அளவு மண்ணை துணியால் எடுத்து முடித்துக் கொண்டு அவர்களின் இடுப்பில் கட்டிக்கொண்டு, அவர்கள் வணங்கிய தெய்வத்தையும் கூடவே கூட்டி கொண்டு வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது, அங்கிருந்த எல்லா தெய்வத்தையும் கூடவே வா! என்று சொல்லி அழைத்து வந்தார்கள். அங்கிருந்து மூன்று பேர் புறப்பட்டு வந்தார்கள்... அவர்கள் #பொய்யாமணி# கிராமத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்றும் பொய்யாமணி மக்கள் குல தெய்வமாக தகப்பன் : ராஜ ராஜ சோழனை (இராசையன்) என்றும்.. தாயார் : கெங்கநாச்சி அம்மாளை(இராசாத்தி) என்றும் வழிபடுவதும் உண்டு. இன்றைய காலத்தில் ஸ்ரீ மலைமேல் அய்யனார் கோயிலில் கரிகால சோழனுக்கும், ராஜ ராஜ சோழனுக்கும் சிலை வைத்து மக்கள் வழிபடுவதும் உண்டு... பொய்யாமணி கிராம மக்கள் இன்றும் வல்லம் சென்று ஸ்ரீமலைமேல் அய்யனாரை வணங்குவதுண்டு... Hip Hop Prem (பேச்சு) 15:02, 12 ஏப்ரல் 2021 (UTC)

@Hip Hop Prem: வணக்கம், இக்கோவில் கரிகால சோழனால் கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதாரத்துடன் கட்டுரையில் எழுதவும் --நன்றி தாமோதரன் (பேச்சு) 15:07, 12 ஏப்ரல் 2021 (UTC)

வணக்கம் அண்ணா. இதற்கு ஆதாரம்,ஸ்ரீ மலைமேல் அய்யனார் கோயிலில் உள்ள சோழ மன்னர்கள் சிலை அருகில் இருக்கும் வசனமே சாட்சி.நன்றி அண்ணா.... தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.. Hip Hop Prem (பேச்சு) 09:46, 13 ஏப்ரல் 2021 (UTC)

@Hip Hop Prem: வணக்கம்,கட்டுரையில் நீங்கள் எழுதிய தகவல்கள் எதற்கும் மேற்கோள்கள் அல்லது ஆதாரம் அல்லது உசாத்துணைகள் எதுவும் தரவில்லை. அதனாலேயே அவை நீக்கப்பட்டன.மேலும் கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் எழுத வேண்டும். தகுந்த ஆதாரம்(சான்றுகள்) - புத்தகம், செய்திதாள் போன்றவைகளை மேற்கோள் காட்டி எழுத வேண்டும்

--நன்றி தாமோதரன் (பேச்சு) 09:58, 13 ஏப்ரல் 2021 (UTC)

Return to "வல்லம் மலைமேல் அய்யனார் கோயில்" page.