பேச்சு:விகிதத் தொடர்பு

"சார்பு" என்ற சொல், function (en:function ((mathematics)) என்பதன் தமிழ்க் கணித கலைச்சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. அதனால் Proportionality என்பதற்கு விகிதச் சார்பு எனத் தமிழாக்கம் செய்துள்ளது இரண்டிற்குமிடையே குழப்பத்தை விளைவிக்கலாம்.

விச்சனரியின் படி Proportionality, Proportional என்பதற்கு விகிதசமத்துவம், விகிதசமம் (விகிதசமன்) எனத் தரப்பட்டுள்ளது.

"விகித சமத்துவம்" அல்லது "விகிதசமத்தன்மை" எனத் தலைப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பயனர்கள் கருத்துக்கள் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:37, 3 ஏப்ரல் 2015 (UTC)

விகித சமத்துவம் என்பது கணிதவியலுக்கு ஏற்ற கலைச்சொல்லாகத் தெரியவில்லை. விகித சமன் என்பது சரியானது. proportionality constant என்பதற்கு விகிதத் தொடர்பு மாறிலி என விக்சனரியில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 06:30, 3 ஏப்ரல் 2015 (UTC)
விகித மாறல் எனபது பொருத்தமான தலைப்பாக இருக்கம். -- Mohammed Ammar (பேச்சு) 06:36, 3 ஏப்ரல் 2015 (UTC)

விகிதத் தொடர்பு என வைத்துக் கொள்ளலாம். Proportionality என்பது ஒருவகையான சார்ந்திருக்கும் தன்மையைக் குறிக்கும். சார்பு என்பது function என ஏற்கனவே இருப்பதால் விகிதத் சார்பு என்பதை விகிதத் தொடர்பு எனக் கொள்ளலாம். Paramesh1231 (பேச்சு) 08:46, 3 ஏப்ரல் 2015 (UTC)

'விகிதத் தொடர்பு' என்றே தலைப்பிடலாம். --Booradleyp1 (பேச்சு) 17:08, 3 ஏப்ரல் 2015 (UTC)

கட்டுரையின் உள்ளே தேவைப்படும் மாற்றங்களைச் செய்து விடுகிறேன். நிர்வாகிகள் எவரேனும் கட்டுரையின் தலைப்பை "விகிதத் தொடர்பு" என வழிமாற்றின்றி நகர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். 'விகிதசமன்' என்ற வழிமாற்றும் தந்து விடலாம்.--Booradleyp1 (பேச்சு) 05:57, 4 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விகிதத்_தொடர்பு&oldid=1834109" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விகிதத் தொடர்பு" page.