பேச்சு:விஜயாலய சோழன்

சோழப் பேரரசின் கூலிக்காரர்கள்

தொகு

பல தமிழர்கள் தங்களை சேர, சோழ, பல்வ, பாண்டிய அரச வம்சங்களின் வழிதோன்றல்கள் என பெருமைபடுவார்கள். ஆனால் பெரும்ப்பான்மையான நாம் அரசர்களின் கொத்தடிமைகளாகவோ அல்லது கூலிக்காரர்களாகவோ இருந்திருப்போம். தமிழர் என்ற அடையாளத்துக்குள் தமது சமத்துவத்தை, வரலாற்றை, இருப்பை காண முனையும் ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் கூட இக் கூற்றை மறக்கின்றார்கள். இக் கூற்றை புறக்கணித்து அரச பெருமை மட்டுமே பேசி எழுதப்படும் வரலாறுகள் அக் கட்டமைப்பையே மீண்டும் பிறப்பிக்க உதவும். உதாரணமாக ஈழ இயக்கங்கள் தமிழர்களின் "ஆண்ட பரம்பரை" பிரச்சாரத்தை மேற்கொள்வது. நடு நிலமை பேசும் விக்கிபீடியாவில் தமிழ் வரலாற்றை சொல்லும் போது மட்டும் ஒரு வித நலின போக்கை கடைப்பிடிப்பது சரியா?

--Natkeeran 15:59, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

Natkeeran, in my humble opinion none of us here are qualified historians to judge the correctness of history taught to us. What we are doing is just to extract info from credible history documents and write articles here. If u have second opinion about the tone and content of any of the articles here, u may rewrite the article supporting ur arguements with credible resources.Thanks--ரவி (பேச்சு) 10:08, 12 ஆகஸ்ட் 2005 (UTC)
Ravi:
Yes, you are right. None of us are “qualified historians”. Perhaps, I expressed a general frustration in a wrong way, at a wrong venue. But, the case remains. There needs to be some balance, or a counter narrative told along with the traditional narrative. The counter narrative should indicate that most of the “history” is skewed. A sort of meta thinking about history.
Imagine what will result if German’s history start to glorify Hilter to the extent that they hide or ignore his flaws or evils or the failure in his philosophy. Similarly, whenever we speak of Tamil kingship, we should to the extent possible try seek the counter narrative. Perhaps, we could tell how people fared. A sort of “people” version of the times. Ok. Maybe, I am going a little too far here, but I think you know what I mean. Moreover, I do not particularly mean this article.
Of course, I can always add that prospective. You can tell what attracts people to Wikipedia. We can not just complain. We can contribute, and we can construct.
--Natkeeran 11:53, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

Natkeeran, we may add balance to the articles by adding lines such as " as mentioned in majority of the history books, the king was.." or "acording to many historians, the king was..". This style of writing will make it clear that it is believed so by many but at the same time need not be correct. Thus we can make sure that we are neither guaranteeing the facts nor propagating false beliefs--ரவி (பேச்சு) 12:20, 12 ஆகஸ்ட் 2005 (UTC)

நற்கீரன், உங்களுடைய கூற்றிலே இருக்கின்ற, சமுதாயத்தின் அடிப்படை முரண்பாடுகளின் வெளிப்பாடு பற்றிய உண்மை எனக்குப் புரிகிறது. உண்மையில் இது உலகத்தின் எல்லாப் பண்பாடுகளிலும் இருக்கின்ற பொதுவான அம்சம். பண்பாட்டியல் அறிஞர்கள் சிலர் இந்த அம்சத்தைப் பண்பாட்டியலின் அடிப்படைகளிலேயே இனங் காணுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெறுமானங்கள் உண்மையிலேயே அச்சமுதாயத்துக்குள் ஒரு பலம் பொருந்திய குழுவினரின் மேலாண்மையை நிலைநிறுத்துகின்ற நோக்கங்களுக்காகவே உருவாகின்றன என்பது சில பண்பாட்டு ஆய்வாளருடைய கருத்து. உலகின் எந்தப் பண்பாட்டை எடுத்துப் பார்த்தாலும் இதன் உண்மையை நாங்கள் அறிந்து கொள்ளலாம். எகிப்திலே உயர்ந்தோங்கி நிற்கின்ற பிரமிட்டுக்கள், தஞ்சைப் பெரிய கோயில், தாஜ்மஹால் , வானளாவிய தற்காலக் கட்டிடங்கள் அனைத்துமே கொத்தடிமைகளினதும் கூலிப் பட்டாளத்தினதும் இரத்தம் தோய்ந்த சின்னங்கள்தான். ஆனாலும் இவற்றை வியந்து பேசுவதை யாரும் நிறுத்திவிடுவதில்லை. இவற்றில் பல இன்றும் அவை அமைந்திருக்கும் தேசங்களினதும், சமூகங்களினதும் பெருமைக்குரிய பண்பாட்டுச் சின்னங்களாகத் திகழ்வது நாமறிந்ததே. இன்று கூடப் பலருக்கு, இந்தியா என்றால் தாஜ்மகால்தான், எகிப்து என்றால் பிரமிட்டுகள்தான், பிரான்ஸ் என்றால் ஈபெல் கோபுரம்தான். இத்தகைய சின்னங்களின் உருவாக்கத்துக்கான பெருமையின் பெரும்பகுதி சேரவேண்டியது கொத்தடிமைகளுக்கும், கூலிப் பட்டாளங்களுக்கும்தான். ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. இவை சர்வாதிகார முடியாட்சிகள் நடந்த காலத்தவை என்று நினைத்துவிடாதீர்கள். இன்றைய ஜனநாயக உலகிலும் ஏதும் வாழ்ந்துவிடவில்லை. ஜனநாயக உலகின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் நாடுகள் பல தங்கள் பலச் சமநிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிமட்ட மக்களின் இரத்தத்தை ஆறாக ஓடவைக்கவில்லையா? ஆனால் வெற்றிக்குரிய பெருமையைப் பெற்றுக்கொள்வது யார்? ஹிட்லர் தோற்றுப்போனவன் என்பதனால் அவனை எல்லோரும் காலில் போட்டு மிதிக்கிறார்கள், வெற்றிபெற்றிருந்தால் அவன் இன்று ஒரு வீரனாகப் போற்றப்பட்டிருப்பான். ஏனெனில் அவனைத் தோற்கடித்தவர்களும் யோக்கியர்கள் அல்ல. காந்தி பற்றியும், இந்தியர்கள் பற்றியும், பிரித்தானியா சார்பில் ஹிட்லருக்கெதிரான யுத்தத்தை வழிநடத்திய வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய கருத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க மேற்கொண்ட முயற்சிகளும் ரகசியமானவை அல்ல. ஆனாலும் சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக சர்ச்சிலை "டைம்" சஞ்சிகை தெரிவுசெய்தது. அலெக்ஸாண்டரைப் பற்றியோ, நெப்போலியனைப் பற்றியோ, அசோகச் சக்கரவர்த்திபற்றியோ பேசும்போது கூட நடப்பது இதுதான். ஒடுக்குமுறைக்கு ஆளான அடிமட்ட மக்களின் தியாகங்களை மலினப்படுத்துவதோ அல்லது அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதோ என்னுடைய நோக்கமல்ல.
ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகம் முழுவதிலும் வாழ்ந்த சமுதாயங்கள் குறிப்பிட்ட சமூகப் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டே தங்கள் செயற்பாடுகளை நிகழ்த்தி வந்திருக்கின்றன. இன்றைய நிலையிலிருந்து, தற்கால சமூகப் பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தக்காலத்துச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வது பொருத்தமானதல்ல. ஒவ்வொரு அரசனைப் பற்றியும் எழுதும் போது " இவன் கொத்தடிமைகளையும், கூலிக்காரர்களையும் அடக்கியொடுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவன்" என எழுதமுடியாது. அல்லது அவ்வரசனைப் பற்றிய எதிர்மறையான ஆதாரங்கள் கிடைக்கும் வரை கட்டுரையெழுதாமல் காத்திருக்கமுடியாது. என்ன ஆதாரபூர்வமான தகவல்கள் உண்டோ அவைகளைப் பற்றிமட்டும் தான் எழுதமுடியும். விக்கிபீடியா எப்பொழுதும் திறந்திருக்கிறது. ஆதாரங்கள் இருந்தால் எவரும் கட்டுரையில் சேர்த்துவிடலாம். விக்கிபீடியாவிலுள்ள கட்டுரை எதுவும் முற்றுப்பெறுவதில்லை. வளர்ந்துகொண்டே இருப்பது. விஜயாலய சோழன் பற்றி நான் எழுதியுள்ளவை எனக்குக் கிடைத்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டது. அதில் அளவுக்கு அதிகமான புகழ்ச்சி எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. பிற்காலச் சோழர்களின் எழுச்சியில் அவன் வகித்த பங்குபற்றிய வரலாற்றுத் தகவல் மட்டுமேயுள்ளது. அவன் தமிழர்கள் சார்பிலான வெற்றிவீரன் என்றும் கூறப்படவில்லை. அவன் தோற்கடித்ததும் இன்னொரு தமிழனைத்தான். இது தற்போது ஒரு குறுங்கட்டுரை, இன்னும் நிறைய எழுதலாம். Mayooranathan 16:51, 12 ஆகஸ்ட் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விஜயாலய_சோழன்&oldid=13364" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விஜயாலய சோழன்" page.