பேச்சு:விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்
நடுநிலைமை
தொகுஇந்த கட்டுரை விக்கியின் நடுநிலை கொள்கையோடு அல்லாமல், தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு சாரரின் எண்ணக்கருக்களாகவே உள்ளது. தான் ஒரு அமைப்பின் மீது வைத்திருக்கும் பிம்பமாகவும், தனது அதே கருத்துக்கொண்ட பிற ஆக்கங்களின் சேகரிப்பாகவுமே இக்கட்டுரையை பார்க்க முடிகிறது.
இலங்கையின் வடக் கிழக்கு பிரதேசங்களின் சரியான அலகுகளை உணர்ந்தோ அல்லது நேரடியாகவோ அறியப்பட்டோ அல்லாமல், ஒரு சிலரின் பதிவின் பால் ஈர்க்கப்பட்டு அதே கருத்துக்களோடு புலிகளை விமர்சிக்கும் ஒரு சார்பு நிலை விமர்சனமாகவே இது இருக்கின்றது. இதை இன்னும் ஒரு வகையில் கூறுவதாயின் ஒன்றின் மீது ஏற்பட்ட தமது எதிர்மாறான கருத்தால், இது இப்படித்தான் என்று எண்ணி, தனது எண்ணத்தை மேலும் சரியென நிரூபிக்க முயலும் ஒரு முயற்சியாக, அந்த முயற்சிக்கு தேவையான அதே ஒத்த எதிர் நிலை தன்மையில், அதே எண்ணங்களைக் கொண்டோரின் பதிவுகளில் பொருக்கி தனது எண்ணக்கருவை நிரூபிக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை உருவாக்கப் பட்டுள்ளது.
சோசலிஸம், மாக்சிஸம், லெனின், பின்னவீனத்துவம், பெண்ணியம், கருத்துச் சுதந்திரம், உழைக்கும் வர்க்கம் என்றெல்லாம் எழுதி அதனூடாக புலிகளை சாடுவதை மட்டுமே குறியாக தொழிலாக கொண்ட ஒரு தனிநபரின் எண்ணத்தின் பிரதிப் பதிவாகவே இக்கட்டுரை உள்ளது.
இது முற்றிலும் ஒரு சார்பு நிலை கட்டுரை. விக்கிப்பீடியாவின் நடுநிலை தவறிய கட்டுரை. தனது மனக்கருத்துக்கு வலு சேர்க்கும் முயற்சியால் மட்டுமே உருவாக்கப் பட்டுள்ள கட்டுரை.
- உங்கள் கருத்துக்கு நன்றி. விமர்சனங்களையும் விமர்சிக்கலாம். தரப்பட்ட ஒவ்வொரு விமர்சனத்துக்கும் உங்கள் மாற்று தகவல்களை இங்கே இணைக்கலாம். மேலும், நீங்கள் பயணர் கணக்கு ஒன்றை தொடங்கி பங்களித்தால் ஆரோக்கியமாக இருக்கும். சமவுடமை, மார்க்சியம், பின்நவீனத்துவம், பெண்ணியம் போன்ற திறனாய்வு பார்வைகள் ஆய்வில் பரவலாக பயன்படுத்தப்படும் paradigams தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்றி. --Natkeeran 22:43, 16 ஜூன் 2008 (UTC)
- ஆம்! குறிப்பாக வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம் போன்ற உயர் விடயங்களைப் பேசி (தமக்கிருக்கும் சிறப்பான) எழுத்தாற்றலின் ஊடாக விசமப் பிரச்சாரங்களை விதைக்கும் ஒருவரே இரயாகரன். மிகக் கீழ்த்தரமான தனி மனித விரோதப் போக்கை முதன்மைக் கொண்டு புலிகளைச் சாடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர். விசமப் பிராச்சாரங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருபவர். அவரின் கருத்துக்களின் சாயலே இக்கட்டுரையில் வெளிப்படுகிறது. வெளியினைப்பாகவும் அவருடைய தளத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- தவிர புலிகளை விமர்சிப்பது பிளையானதல்ல. புலிகளை ஆதரிக்கும், புலிகளை ஆதரிக்காத தமிழ் மக்களின் மீது பற்றுக்கொண்டோரினால் வைக்கப்படும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஆரோக்கியமானதே. அது புலிகளை திருத்தும் கண்டிக்கும் முயற்சியாகவும் இருக்கலாம், திருத்தும் முயற்சியாகவும் அமையலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக தமிழ் இனம் செத்து மடிகையிலும் அதற்கான எந்த செயல் நடவடிக்கைகளிலும் இறங்காத, ஏன் விக்கி திட்டம், நூலகம் திட்டம் போன்று தமிழ் வளர்ப்பு பணிகளுக்கு கூட எந்த ஒரு பங்கும் அளிக்காத, பிரான்சில் முதாளாலித்துவ நலன்களை அனுபவித்துக் கொண்டு வர்க்கப் போராட்டம் பேசி வெறுமனே புலிகளுக்கெதிரான விசமப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இவர்களின் கருத்துக்களை புறம் தள்ளாமல், அதற்கு சாய்வுநிலை கொடுக்கப்படல் நடுநிலை தவறானதுதான். நன்றி ஓர் விக்கிப்பங்களிப்பாளர்
- உங்கள் நிதனானமான பதிலுக்கு நன்றி. இந்தக் கட்டுரைக்கு ஆணித்தரமான மேற்கோள்கள் சுட்டப்படுதல் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது முடியும், நேர அவகாசம் தேவை.
- இங்கே தரப்பட்ட விடயங்களுக்கு மாற்று தகவல்கள் இருந்தால் இணைக்கவும். யார் விடயங்களை சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்லப்படுகிறது என்பற்கு கூடிய கவனம் தந்தால் நன்றாக இருக்கும். நிச்சியமாக இதாயகரன் மட்டுமே புலிகளை விமர்சிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், ஐ.நா சபை அமைப்புகள், பல்வேறு அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. இங்கே இரண்டை நினைவில் கொள்ளுதல் பொருந்தும்
- எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்பது அறிவு.
- எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு.
- இங்கே தரப்பட்ட விடயங்களுக்கு மாற்று தகவல்கள் இருந்தால் இணைக்கவும். யார் விடயங்களை சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்லப்படுகிறது என்பற்கு கூடிய கவனம் தந்தால் நன்றாக இருக்கும். நிச்சியமாக இதாயகரன் மட்டுமே புலிகளை விமர்சிக்கவில்லை. மனித உரிமை அமைப்புகள், ஐ.நா சபை அமைப்புகள், பல்வேறு அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. இங்கே இரண்டை நினைவில் கொள்ளுதல் பொருந்தும்
- நீங்கள் இதை இன்னுமொரு ஆக்கபூர்வமான முறையிலும் எதிர் கொள்ளலாம்.
- தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் என்ற கட்டுரையைத் தகுந்த மேற்கோள்களுடன் எழுதி, அவர்களின் நிலைப்பாடுகளைத் தெளிவாக தரலாம்.
புலிகளின் கொள்கைகள்
தொகு- தமீழீழக் கோரிக்கை
- தமிழீழத் தேசியம்
- சுயநிர்ணய உரிமை
- இயக்க ஒழுக்கமும் கட்டுப்பாடும்
- தனிமனித, மனித உரிமைகள்
- பொருளாதாரக் கொள்கைகைள்
- சாதிய எதிர்ப்பு
- பெண் விடுதலை, சம உரிமை
- சமய சார்பு இன்மை
- உலகமயமாதல் பார்வை
- அரச முறை
- முஸ்லீம்கள் தொடர்பான பார்வை
- மலையகத் தமிழர் தொடர்பான பார்வை
--Natkeeran 15:16, 18 ஜூன் 2008 (UTC)
மனித உரிமைகளும் புலிகள் மீது விமர்சனனமும்: கட்டுரை தேவையா?
தொகு- மனித உரிமைகள் பற்றி நாம் பேசுகிறோம், எழுதுகிறோம், விவாதிக்கிறோம். ஆனால் அவ்வாறான ஒரு உரிமை தமக்கு இருப்பது பற்றியே கேள்விப்படாமல் வடக் கிழக்கு மக்கள் தமது உயிர்களை இழந்து கொண்டு உள்ளனர்.
- இதில் இன்னமும் மோசமானது என்னவென்றால் அந்த மக்களுக்கு இந்த மனித உரிமைகளை மறுத்தவர்கள், அதே உரிமைகளைக் கேட்டு மேற்கு நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர் அல்லது மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ முற்படுகின்றனர். அங்கிருந்துக்கொண்டு மனிதவுரிமை மீறல்கள் பற்றி அவர்களே பேசிக்கொண்டு புது வியூகத்துடன் புலியெதிர்ப்பைத் தொடர்கின்றனர்.
- ஆனால் மக்களோ மௌனிகளாகவே இருக்கின்றனர். குறிப்பாக வடக்கிழக்குப் பிரதேசங்களில் இலங்கை அரசின் இரும்புப் பிடியில் இருக்கும் அவர்களே உண்மை நிலை அறிந்தவர்களாக இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இலங்கை அரசும், அரசசார் ஊடகங்களும் அதை இருட்டடிப்புச் செய்து வருகின்றது. ஆனால் அனுபவிக்கு தமிழ் மக்களோ அவர்களது உயிர் ஆபத்தான நிலையில் நாட்களை நகர்த்துகின்றனர். அவர்களது கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். வடக்கிழக்கு பிரதேசங்களில் இருந்து புலம் பெயர்வோர்களாலும் இதுப் போன்ற பொது தளங்களில் தம் கருத்துக்களை முன் வைக்க சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கில் சர்வதேசம் தமிழர் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறது எனும் கேள்விப் பயமே. மற்றது அவர்கள் அரசியில் புகழிடம் கோரும் நாடுகளின் சட்டங்களுக்கும் அஞ்ச வேண்டியுள்ளது.
- புலியெதிர்ப்பு வாதங்களை தொடர்வோருக்கோ எவ்விதச் சிக்கலும் இன்றி தொடர்வதற்கு இன்றைய உலக அரசியல் யதார்த்தம் சாதகமாக உள்ளது.
- புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் அத்தியாவசிய தேவைகளையே இலங்கை அரசு திட்டம்மிட்டு முடக்கி வருகின்றது. எந்த ஒரு சக்தியையும் புலிகளுக்கு எதிராக தூண்டிவிட்டு அதனூடாக அரசியல் ஆதாயம் நாடி நிற்கின்றது.
- கேணல் கருணா போன்றோர் இலங்கையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்கள், போர்க் குற்றங்களைப் புரிந்தவர்களின் நடமாட்டம் மேற்கு நாடுகளில் அதிகரித்து உள்ளது. அரசியல் தஞ்சமாகவும் புலம்பெயர் தேசமாகவும் இவர்கள் மேற்கு நாடுகளில் கால் ஊன்றத் தலைப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மேற்கு நாடுகள் அவ்வளவு அக்கறை காட்டியதாக இல்லை.
- நாளை இந்த கருனாவாலும் மீண்டும் புலியெதிர்ப்பு விமர்சனங்கள் தொடரும். அப்போதும் அம்மக்கள் மௌனிகளாகத் தான் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுப் போன்ற நிகழ்வுகள் இலங்கை அரசின் அராஜகப் போக்கிற்கு மட்டும் ஆதரவாக அமையும்.
- இன்று மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முக்கிய இடம் பிடித்து உள்ளது. அதனால் இந்த மனித உரிமை மீறல்களை புரிபவர்கள் பற்றிய விபரங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கையில் மனித விழுமியங்களுக்கு எதிராக போர்க் குற்றங்களைப் புரிந்த பலர் மேற்கு நாடுகளில் சுக வாழ்வை அனுபவிக்கின்றனர். இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது மனித விழுமியங்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கொடுக்கிறது.
- இங்கே நாம் ஒன்றைப்பார்க்க வேண்டும் புலிகளை விமர்சிப்பது அல்ல பிரச்சினை, புலிகளை விமர்சிப்பதாக, அல்லது விமர்சனங்களை தொகுப்பதாக நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் தமிழர் தரப்பிற்கு சாதகமான ஒன்றையும் கொண்டுவரப்போவதில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல. இவ்வாரான விமர்சனங்கள் மேலும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு, அவர்களது மனிதவுரிமை மீறல்களை மறைப்பதற்கு ஆதரவு நிலையே எற்படுத்தி விடும்.
- வட கிழக்கு மக்களின் அவல நிலைக்கு இலங்கை அரசே முக்கிய பொறுப்பாளி என்பது சரியே. இலங்கை அரசே மனித உரிமைகளைச் சற்றும் மதிக்காமல் மக்களை வதைக்கிறது என்பதும் சரியே. இலங்கையில் மனித உரிமைகள் அதைப்ப்பற்றி விரிவாக எழுதினால் நன்று.
- எமது இன்றைய நிலைமை கருத்தில் கொள்கையில் எதனை முதன்படுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய கேள்வி எம்முள் உள்ளது. அந்த நிலையில் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு தள்ளிய இலங்கை அரசின் பயங்கரவாத செயற்பாடுகளை எடுத்து சொல்வது முக்கியமே. அதே போல் எமது சமூகத்துக்குள் இருந்த தொடர்ந்து இருக்கும் சாதிய வர்க்க பால் அடுக்குமுறைகளைப் பற்றி எடுத்து சொல்வதும் முக்கியமே. அதேவேளை போராட்ட இயக்கங்கள் பற்றிய குறைகளையும் ஆவணப்படுத்துவதும் முக்கியமே. மனித உரிமைகளை யார் மீறினாலும், அதை ஆவணப்ப்படுத்துதல் நன்று. நாம் முடிவெடுக்கும் பொழுது, எம் முன் இயன்ற அளவு எமது குறைகளையும் சுட்டி நிற்கும் தகவல்களையும் கருத்தில் எடுதுக்கொள்வதும் அவசியமாகா அமைகிறது. --Natkeeran 14:27, 19 ஜூன் 2008 (UTC)
நடுநிலை
தொகுஇக்கட்டுரையில் நடுநிலைப் பிறழ்வு இருப்பது போல் தெரியவில்லை. அடையாளம் காட்டாத ஒருவர் மட்டுமே அவ்வாறு சொல்லியிருக்கிறார். இது குறித்து மற்ற பயனர்களின் கருத்து தேவை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:08, 30 ஏப்ரல் 2012 (UTC)