பேச்சு:வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சிறு அகவையிலிருந்தே வாண்டுமாமாவின் வெகு தீவிர விசிறி நான். அவர் கதைகள் என்றால் எனக்கு உயிர். இன்றும் அவரது கதைகளைக் கருவூலமாய்ப் பாதுகாத்து வருபவன் நான். என்னைப் போல் பல தமிழ்ச் சிறுவர்களின் உள்ளத்தில் ஒருகாலத்தில் முடிசூடா மன்னனாய்த் திகழ்ந்தவர் அவர். ஆனால் அவரைப் பற்றி இன்று பலருக்கு நினைவில்லாததால் அவர் பற்றிய கட்டுரையை விக்கிபீடியாவில் நான்தான் எழுத வேண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால் எனக்கு முன்பே இங்கு ஒருவர் எழுதியிருப்பது கண்டு, இன்னும் அவரை நினைவில் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தக் கட்டுரையைப் படைத்த அந்த விக்கியக் கிளைஞருக்கு நன்றிகள்!--இ.பு.ஞானப்பிரகாசன் 15:28, 6 ஜூன் 2010 (UTC)

Return to "வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)" page.