பேச்சு:வீ. பூங்குன்றன்
Untitled
தொகுபார்க்க: Wikipedia:பெயரிடல் மரபு. --Natkeeran 03:45, 13 ஆகஸ்ட் 2007 (UTC)
பழ.வீரன் வீ. பூங்குன்றன் அவர்களின் தந்தை பெயர் என்பதை நான் தெரிந்து கொள்ளாமல், பூங்குன்றன் வீரன் என்பதை நீக்கினேன். அப்படி நீங்கள் விரும்பினால், மீண்டும் மாற்றி விடுகின்றேன். (ஆரம்பத்தில் வீரன் என்று நீங்கள் சேர்த்தது புகழ்ச்சி பெயர் என்று நினைத்து விட்டேன்.) மன்னிக்கவும். --Natkeeran 22:30, 13 ஆகஸ்ட் 2007 (UTC)
கட்டுரையில் இருந்த (கலைக்களஞ்சியத்துக்கு ஒவ்வாதவை எனக் கருதும்) சில பகுதிகள் நீக்கப்பட்டு அதனை இங்கு கீழே இட்டுள்ளேன்.--Kanags 14:28, 16 ஆகஸ்ட் 2007 (UTC)
"எந்த தளத்தில் பணியாற்றிலும் தமிழ், தமிழர் நலன் குறித்து அதிகம் சிந்திப்பவர். களப்பணியாற்றுபவர். ஆண்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வாங்கி வாசிப்பவர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கணினியும் கையுமாகதான் இவரை பார்க்க முடியும். தம்மால் ஆன மட்டும் பிறருக்கு உதவும் பெரும் மனம் கொண்டவர். அதனால் அவர் இழந்தது அதிகம். இன்றும் எந்த விமர்சனத்திற்கு பயந்தும் தம் செயல்பாடுகளை முடக்கி கொள்ளாதவர்.
24 வயதே ஆன பூங்குன்றன் பொருளாதார அளவில் சாதிக்கவில்லையென்றாலும் யாரும் தொட அஞ்சுகிற துறைகளில் தமது ஆளுமையை செலுத்தி வருகிறார்."
மொழி (வலைத்தளம்)
தொகுமொழி.நெட் (வலைத்தளம்) பற்றி ஒரு தனிக்கட்டுரை ஆரம்பிக்கலாமே. இது தனிக் கட்டுரைக்கு உரிய ஒரு தளமாகவே தெரிகின்றது. அந்தளவு தகவல்கள் ஏற்கனவே இக்கட்டுரையில் உள்ளன. --Natkeeran 02:11, 19 ஆகஸ்ட் 2007 (UTC)
யார் இவர்?
தொகுவீ.பூங்குன்றன் என்பவர் விக்கிபீடியாவில் தனிக்கட்டுரை எழுதுமளவு முக்கியமானவரா? இக்கட்டுரை ஒருகுறித்த பயனரால் வீ.பூங்குன்றனுக்கான விளம்பரமாகவே தொடர்ச்சியாக எழுதப்பட்டுவருகிறது. --கோபி 11:51, 24 செப்டெம்பர் 2007 (UTC)
வீ.பூங்குன்றன் முக்கியமானவரே
தொகுதனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு வீ.பூங்குன்றன் முக்கியமானவரே! 24 வயது மட்டுமே ஆன இளைஞர். மலேசியாவில் எல்லா உணர்வாளர்களும் அறிவார்கள். சுய விளம்பரம் தேடும் அளவுக்கு அவர் விளம்பரப்பிரியர் அல்ல. நான் வீ.பூங்குன்றனை நன்கு அறிந்தவன். மலேசியாவில் தமிழ்ப் போராட்டத்திற்காக தம் வாழ்நாளை செலவிடும் குடும்பம் அவருடையது. அவரின் தந்தை பழவீரர் அண்மையில் சாலை நேர்ச்சியில் காலமானார். மலேசியாவில் சித்த வித்தை பயிற்சியாளராக விளங்கி சித்தர் நெறியோடு தமிழ்நெறியையும் பரப்பியவர். பூங்குன்றன் முக்கியமானவரே!- இனி
- இணையத்தளம் நடத்தும் இத்தகைய இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தனிக்கட்டுரை எழுதப்படும் அளவுக்கு முக்கியமானவர்கள் அல்லர். பூங்குன்றனது ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாராட்டப்படக்கூடியது. ஆனால் கலைக்களஞ்சியக் கட்டுரை எழுத வேண்டியதில்லை. மொழி.நெட் தொடர்பாக தனிக்கட்டுரை எழுதுவது பொருத்தமானது. --கோபி 12:42, 24 செப்டெம்பர் 2007 (UTC)
- இவர் வெறுமனே இணையத்தளத்தை நடத்துபவராகத் தெரியவில்லை. மலேசியத் தமிழர்களில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். ஊடகவியலாளர். எனவே விக்கிபீடியாவில் இடம்பெறத்தகுதியானவர் என்பது எனது அபிப்பிராயம்.--Kanags 12:49, 24 செப்டெம்பர் 2007 (UTC)
இவரது முக்கியத்துவம் தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் இக்கட்டுரை இருக்கலாம். மொழி.நெட் தனிக்கட்டுரை இடம்பெறத்தக்க அளவு முக்கியமான தளம்தான். மொழி.நெட் தொடர்பான தகவல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் பூங்குன்றன் தொடர்பான உயர்வுநவிற்சி மட்டுமே இக்கட்டுரையிலுள்ளது. --கோபி 12:56, 24 செப்டெம்பர் 2007 (UTC)
- இளம் தமிழ் ஆவலர், செயற்பாட்டாளர். அவருடன் நாம் நேரடியாக தொடர்பு பேணலாம். எனவே, பொறுத்து, இங்கே இருக்கும் தகவல்களை பயனர் பக்கத்து மாற்றலாமா என்று பார்க்கலாம். நன்றி. --Natkeeran 14:56, 24 செப்டெம்பர் 2007 (UTC))
நற்கீரன், நான் பார்ப்பது வயதை அல்ல. என் நண்பர் பலரைப் பற்றி இதைவிட விரிவாக இங்கே கட்டுரை எழுத முடியும். ஒரு கலைக்களஞ்சியத்தில் கட்டுரை இருக்குமளவு முக்கியமற்ற சிலரைப் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே இங்கே உள்ளன. த.வி.யை வெறுமனே தரவுகளைக் குவிக்குமிடமாகக் கருதாமல் ஒரு கலைக்களஞ்சியமாகப் பார்க்கிறேன்... மொழி.நெட் சிறப்பாக உள்ளது. அதற்காகப் பூங்குன்றனைப் பாராட்டத்தான் வேண்டும். விக்கிபீடியாவில் கட்டுரை எழுத வேண்டியதில்லை. I miss Ravi these days :-) மேலும் இத்தகைய விவாதங்களில் பங்குபற்றாத்தான் வேண்டுமா என யோசிக்கிறேன். கோபி 15:06, 24 செப்டெம்பர் 2007 (UTC)
- கோபி, உங்களின் கருத்தும் பங்களிப்பும் தமிழ் விக்கிபீடியாவிற்கு மிகவும் வலுச்சேற்பவை. எனவே, தயந்து உங்கள் பணிகளை தொடர்ந்து நல்குங்கள். --Natkeeran 15:47, 24 செப்டெம்பர் 2007 (UTC)
பூங்குன்றன் கலைக்களஞ்சியத்தில் இடம் பெறும் அளவு முக்கியத்துவம் உள்ளவரா என்று மலேசியத் தமிழ்ச் சூழலை அறிந்தவர்களாலே கூற முடியும். பிற இணையத்தமிழ்க் களங்களில் மலேசியாவில் இருந்து இயங்கும் தமிழன்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். எனினும், கட்டுரையை வாசித்த மட்டில், அப்படி அவருக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் புலப்படும் வகையில் கட்டுரை எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.
//ஒரு வரைகலையாளரான இவர் மலேசியாவில் வெளிவருகிற முன்னணி நாளேடான மலேசிய நண்பனில் சில காலம் பணியாற்றியவர். மலேசியாவின் முன்னணி சிற்றிதழ்களில் இவர் கட்டுரைகள் அதிகம் எழுதி வருகிறார்.//
இது போன்ற தகுதிகள் உடையோர் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திலும் ஈழத்திலும் உண்டு. இவருடைய பெயரில் தேடினால் இணையத்திலும் தெளிவான முடிவுகள் கிட்டவில்லை. இவருடைய தந்தை பற்றி ஒரு பத்தி எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவரின் தந்தையின் முக்கியத்துவத்தும் இவருடைய முக்கியத்துவத்தைத் தீர்மானிக்க உதவாது.
//வீ. பூங்குன்றன் மலேசியாவில் வாழ்கிற தமிழ் ஊடகவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.//
எப்படி குறிப்பிடத்தக்கவர் என்பதைப் புலப்படுத்தும் வகையில் கட்டுரையில் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. தமிழியக்கம்.காம் தளத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பது மட்டுமே முக்கியத்துவமாகத் தெரிகிறது. எனினும், இவ்வியக்கம் / இணையத்தளத்தின் தோற்றத்தில் பூங்குன்றனின் பங்கும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தமிழியக்கம்.காம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில் அதன் தாக்கம், தேவை, தோற்றம் குறித்து தனிக்கட்டுரை எழுதலாம். அக்கட்டுரையில் நிறுவனர்களில் ஒருவராகப் பூங்குன்றனைக் குறிப்பிடலாம்.
மேலதிகத் தகவல்கள் இணைக்கப்படாத நிலையில் இப்போது இத்தனிக்கட்டுரை தேவை இல்லை என்று தோன்றுகிறது.
சில சமயம் தமிழகம் / ஈழத்தவர்களைச் சேர்ந்தவர்களைக் குறித்தும் இது போன்று கட்டுரைகள் வருகின்றன. ஒரு நபரின் முக்கியத்துவத்தை அறிய அவரைப் பற்றி பிற நம்பகத்துக்குரிய இணையத்தளங்கள், நூல்கள், செய்தித்தளங்கள், அத்துறையில் அறியப்பெற்ற நபர்கள் மூலமாகத் தெரிய வரும் குறைந்தபட்ச சான்றுகளாவது இணைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கலைக்களஞ்சிய முக்கியத்துவம் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க இயலாதது. --Ravishankar 18:48, 24 செப்டெம்பர் 2007 (UTC)
- பொறுத்து, அவருடுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, இங்கே இருக்கும் தகவல்களை பயனர் பக்கத்து மாற்றலாமா என்று பார்க்கலாம். அவர், த.வி தன்னைப் பற்றி ஒரு அறிமுகமாகவும் இந்த தகவல்களை இங்கே சேர்த்திருக்ககூடும். மேலும், மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பிடத்தக்க பணிகளை செய்து வருபவர் போன்றே தெரிகின்றது. --Natkeeran 23:45, 25 செப்டெம்பர் 2007 (UTC)
மொழி.நெட் கட்டுரையிலும் இவரைப் பற்றிய சில தகவல்களைச் சேர்ப்பது பொருத்தமானது. கோபி 04:00, 26 செப்டெம்பர் 2007 (UTC)
நீக்கினால் நீக்குங்கள்
தொகுவீண் விளம்பரங்களுக்காக வீ.பூங்குன்றன் பற்றி தகவல்கள் இணைக்கப்படவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிற குப்பைகளை களைவதை விட்டு விட்டு வீ.பூங்குன்றன் பற்றிய தகவல்களை நீக்க முனைவது ஏன் என தெரியவில்லை. அவர் பற்றிய தகவல்களை பதிவுச் செய்தவன் நான்தான். எனவே நீக்குங்கள். மலேசியத் தமிழ் செயல்பாட்டாளர்கள் பற்றி இன்னும் இணைப்பேன். அதையும் நீக்குங்கள். அண்மையில் திரு. பழவீரர் பற்றி செய்தி கொஞ்சம் இணைத்திருக்கிறேன். அதையும் நீக்குங்கள். - இனியன்
- இனியன், பூங்குன்றன் குறித்த கட்டுரையை நீக்க வேண்டுமென்பதோ மலேசியத் தமிழர் குறித்த தகவல்களை நீக்க வேண்டுமென்பதோ எங்கள் எண்ணமில்லை. அப்படி ஒரு புரிதல், மனக்கசப்பு தங்களுக்கு வந்திருந்தால் வருந்துகிறேன். எனினும், மேற்கண்ட உரையாடலில் குறிப்பிட்டுள்ளபடி அவரின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்ள உதவும் தகவல்கள் குறைவாக உள்ளதையே சுட்டிக் காட்டி இருக்கிறோம். மேலதிகத் தகவல்களை நீங்கள் சேர்க்கும் பட்சத்தில் இக்கட்டுரையின் இருப்பு குறித்து பொருதமான முடிவு எடுக்க உதவும்.
நீங்கள் உருவாக்கிய மலேசிய நண்பன் போன்ற கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை. இது வரைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் மலேசியா, மலேசியத் தமிழ், மலேசியத்தமிழர், அவர் தம் வாழ்க்கைச் சூழல் குறித்த கட்டுரைகள் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். இலட்சக்கணக்கில் தமிழர் வாழும் மலேசியச் சூழல் குறித்த கட்டுரைகள் நிச்சயம் நம் கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. இந்தத் துறையில் மேலதிகத் தகவல்களைச் சேர்க்க உங்களைப் போன்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம். தொடர்ந்து பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறேன். --Ravishankar 11:24, 26 செப்டெம்பர் 2007 (UTC)
- நண்பரே, குப்பைகளை அடையாளம் காட்டுங்கள். அவற்றை நீக்குவதில் நீங்களும் பங்களியுங்கள். த.வி உங்களுடையதும்தான். பூங்குன்றனின் முக்கியத்துவம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. நன்றி. கோபி 11:42, 26 செப்டெம்பர் 2007 (UTC)
- இனியன், உங்கள் பங்களிப்புகள் நன்றாகவே அமைந்துள்ளன. எனவே, வீ. பூங்குறன் நோக்கிய உங்கள் மதிப்பீட்டை மதிக்கின்றோம். உங்களுக்கு மனக்கசப்பு நேர்ந்திருந்தால் வருந்துகின்றோம். இணைந்து செயற்படுவோம். நன்றி. --Natkeeran 23:06, 26 செப்டெம்பர் 2007 (UTC)
இனியன், அருள்கூர்ந்து மனவருத்தம் கொள்ளாதீர்கள். அண்மையில்தான் நற்குணன் என்னும் ஒரு அருமையான தமிழர் த.வியில் இணைந்திருக்கிறார் (நான் அறிய). உங்களைப் போன்றவர்க்ள், மலேசியாவைப் பற்றியும், அங்கு வாழும், தமிழர், தமிழ் மலேசியர், மலாய் மலேசியர், சீன மலேசியர், மலேசிய மற்றும் மலேசியாவை சுற்றி உள்ள நாடுகளில் நீங்கள் அறிந்ததை, கலைக்களஞ்சிய நோக்கை அறிந்து சேர்க்க வேண்டுகிறேன். பழவீரர், பூங்குன்றன் அவர்களைப் பற்றி நான் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். த. வி யாருடைய தனிச் சொத்தும் இல்லை. இதில் அக்கரை கொண்டவர்கள் "தரம்" குறித்தும், செய்தித் "தகுதி"யைக் குறித்தும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். நீங்கள் கூறியவாறு "குப்பைகள்' இருப்பின், அருள் கூர்ந்து திருத்துங்கள், நீக்கப் பரிந்துரையுங்கள். அதாவது நாம் இங்கு வளர்முகமாக திறனாய்வு, கருத்தாடல் நிகழ்த்த வேண்டும். உங்களை மீண்டும் அன்புடன் ஆக்கப் பணிகளில் ஊக்கமாய் இருக்க வேண்டுகிறேன். நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்- களைய வேண்டியது மிகவும் முக்கியமான பணிகளுள் ஒன்று, ஆனால் களைவதினும் திருத்தி, செப்பம் செய்து, கூடுமானவரை ஏற்றுக்கொள்ளுமாறு செய்யுங்கள், அல்லது அப்படி செய்யத்தக்க மற்ற பயனர்களை அழையுங்கள் (ஆனால் சற்று பொறுமையாகவும் இருக்க வேண்டுகிறேன்). விளம்பரம் என்று நிர்வாகிகள் கருதுவதை, அதே அக்கரை கொண்ட மற்றொருவர் அப்படி நினைக்காமல் இருக்கலாம். இன்றைய தமிழர் நிலையில் பல பயனுடைய செய்திகள், கருத்துகள் மிகத்தேவையாக இருக்கின்றது. அவற்றை விளம்பரம் என்று ஒதுக்குவதும் அது பற்றி மிக இறுக்கமாக இருப்பதும் சரியில்லை என்பது என் கருத்து. மேலும் சற்று பொறுமையும் வேண்டும். செய்ய ஆயிரம் ஆயிரமாய் உள்ளது, இப்படி அறியவேண்டிய (சிலருக்கேனும்) குறிப்புகளை நீக்குவதில் ஒரு பயனும் இல்லை. இனியன் அருள் கூர்ந்து மனவருத்தம் கொள்ளாதீர்கள், பொருத்தருள்க. இக்கட்டுரையை பூட்டி வைப்பதையும் நான் விரும்ப வில்லை.--செல்வா 23:34, 26 செப்டெம்பர் 2007 (UTC)
- செல்வா, பூட்டு நீக்கப்பட்டுள்ளது. கோபி புரிந்துகொள்வார் என்று நம்புகின்றேன். நன்றி. --Natkeeran 23:48, 26 செப்டெம்பர் 2007 (UTC)
- நன்றி நற்கீரன். --செல்வா 00:32, 27 செப்டெம்பர் 2007 (UTC)
- செல்வா, பூட்டு நீக்கப்பட்டுள்ளது. கோபி புரிந்துகொள்வார் என்று நம்புகின்றேன். நன்றி. --Natkeeran 23:48, 26 செப்டெம்பர் 2007 (UTC)
செல்வா, நான் இக்கட்டுரையை நான் பூட்டக் காரணம் நீக்கல் வார்ப்புரு பேச்சுப்பக்க உரையாடலின்றி இருதடவை அகற்றப்பட்டமையே ஆகும். அந்த மாற்றம் செய்த IP ஐ பாருங்கள் :-) இன்னமும்கூட இக்கட்டுரை இங்கு இருக்க வேண்டிய காரணத்தை இனியன் தெரியப்படுத்தவில்லை. த.வி.யின் எல்லைகள் புரிந்துகொள்ளப்படக் கூடியவைதான். கோபி 04:48, 27 செப்டெம்பர் 2007 (UTC)