பேச்சு:வெப்ப இயக்கவியல்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Rselvaraj
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: கல்லூரி: {{{College}}} |
தெறுமத்தினவியல் என்பதற்கு பதிலாக தெர்மோடைனாமிக்ஸ் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். வெப்ப இயக்கவியல் என்னும் எளிமையான சொல் இருக்கும் பொழுது தெறுமத்தினவியல் என்பது தேவையா? துணிந்து நல்ல சொல்லாட்சிகளை பயன்படுத்தவேண்டும். வெப்பம் என்பதை அறியாத தமிழர் இருக்க முடியுமா, அப்படியிருக்க வெப்ப இஅய்க்கவியல் என்பதற்கு ஏன் தேவை இல்லாத தெறுமத்தினவியல் ?? --C.R.Selvakumar 17:24, 2 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
- இராம.கி அவர்கள் தனது வலைப்பதிவில் இவ்வார்த்தையை பரிந்துரத்ததாக நினைவு. --சிவகுமார் 18:53, 2 ஆகஸ்ட் 2006 (UTC)
- வெப்பஇயக்கவியல் தான் என் விருப்பமும். எளிய, நேரடி சொல்லாக இருக்கிறது. இயக்கவியல் என்ற சொல்லை mechanics, dynamics என்ற பொருளில் வேறு சில கட்டுரைகளிலும் பயன்படுத்தியுள்ளோம். தெறுமத்தினவியல் என்பதை அகரமுதலி வைத்து விளக்கினால் தான் விளங்கும். இயன்றவரை கடினமான சொற் பயன்பாடுகளை தவிர்ப்பதை விக்கிபீடியா கொள்கையாக கொள்ளலாம். பிறகு, வெப்ப இயக்கவியல் என்று பிரித்து எழுதலாம் தானே?; தவறொன்றும் இல்லையெனில்..--ரவி 09:41, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
- இது மிகவும் பழைய உரையாடல் போலிருக்கிறது. இதுபற்றி வேறு எங்கேனும் பேசி முடிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. வெப்ப இயக்கவியல் என்று பிரித்து எழுதுவதே சரியெனப்படுகிறது. இல்லாவிட்டால் வெப்பவியக்கவியல் என்றல்லவா குழப்ப வேண்டும்! --இரா.செல்வராசு 02:24, 22 மே 2008 (UTC)