இலங்கையில் speed என்பது கதி என்றும் velocity என்பது வேகம் என்றும் குறிக்கப்படுகிறது --Sank 18:42, 23 பெப்ரவரி 2012 (UTC)

சங்கீர்த்தன், நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும், இங்கு velocity என்பதற்கு திசைவேகம் என்ற சொல் தரப்பட்டிருக்கிறது. அதுவும் நேரடியாகப் பொருள் தரும் சிறந்த சொல்லாக இருக்கிறது. தமிழகப் பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படுகின்றன போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 20:51, 23 பெப்ரவரி 2012 (UTC)
விரைவு, வேகம் = speed; திசைவிரைவு, திசைவேகம் = velocity. நெறிவிரைவு என்றாலும் velocity. நெறி என்பது நோக்கி நகரும் திசையைக் குறிக்கும். கதி என்பது கதிரவனைச் சுற்றிவரும் பாதைகளில் கோள்களின் நகர்ச்சியை நடையைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. கதி என்றால் விரைவு என்றும் கட்டாயம் பொருள்படும். கதி என்பதற்கு மிகப்பல பிற பொருள்களும் உண்டு ("நீயே கதி", "கணினியே கதி" என்பதுபோல (இங்கு புகலிடம்).--செல்வா 00:56, 24 பெப்ரவரி 2012 (UTC)
வேகம் என்பது தமிழ்ச் சொல்லல்லவே.--பாஹிம் 01:42, 24 பெப்ரவரி 2012 (UTC)
ஆம், தமிழ்ச்சொல் அன்று! ஆனாலும் தமிழில் பரவலாகப் பயன்படும் சொல். வேகம் என்றால் வேகுதலோடு தொடர்புடையதோ என்றும் குழம்பலாம் :) வே, வேகு, வேக்காடு (வேகாளம் = வேக்காடு) என்னும் சொற்களின் வழி பிற சொற்களைப் படைப்பதில் சிறு தடைகள் வரலாம். எடுத்துக்காட்டாக வெதுப்பகத்தில் வேக வைத்த பொருள்களை வேகை (baked food)எனலாம், வேக வைத்தல் என்னும் பொருளே வேகம் என்னும் சொல்லால் பொருள் குழப்பம் உண்டாக்கலாம். ஆனால் இன்று வேகம் என்னும் சொல் மிக நன்றாக பழக்கப்பட்ட சொல் தமிழில். வேகம் என்னும் சொல்லை நீக்க நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் இன்னொரு வேடிக்கையும் உண்டு. விரைவு என்றாலும் வெம்மை என்று பொருள் உண்டு (விரவுதல், பரவுதல் என்னும் பொருளில்). விரைதல் = வெயில் என்றும் பொருள்!விரைஇ என்றால் "விரவி", "தெளித்து" என்று பொருள், ஆங்கிலத்தில் radiate என்பார்களே அதுபோன்ற பொருள். விரை என்றால் வித்து (விதை) என்னும் பொருளும் பரவுதல், கிளைத்தல் என்னும் பொருளில். மணம் பரப்புவதால், மலருக்கும் விரை என்று பொருள். நறும்புகை, பூந்தேனுக்கும் விரை என்று பெயர். --செல்வா 02:12, 24 பெப்ரவரி 2012 (UTC)

கிருத்திகன், மேற்படி உரையாடலின் படி, speed என்பதற்கு வேகம் என்றும் velocity என்பதற்கு திசைவேகம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அச்சொற்களையே பெரும்பான்மையானோர் பயன்படுத்துகின்றனர். அவ்வாறே இருப்பது நல்லது. கதி என்பதற்கு வழிமாற்று இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 10:55, 3 ஆகத்து 2012 (UTC)Reply

தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் பரவலாகக் கையாளப்படும்போது தமிழ்ச் சொல்லைக் கையாளுவது தானே சிறப்பு. இலங்கையில் கதி என்னுஞ்சொல் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளபோது வேகம் என்ற வடசொல்லை, அதுவும் Velocity என்பதுடன் குழப்பந்தருஞ்சொல்லை இங்கு பயன்படுத்தத் தான் வேண்டுமா?--மதனாகரன் (பேச்சு) 11:26, 3 ஆகத்து 2012 (UTC)Reply
இது குறித்து செல்வா மேலே சிறந்த விளக்கம் தந்துள்ளார். இதில் குழப்பம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பரவலான பயன்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:32, 3 ஆகத்து 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேகம்&oldid=1181238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேகம்" page.