பேச்சு:வேதி வினைகலன்

செல்வராசு, வேதிவினையின் முடிவாய் விழையும் பொருள் அதிகளவில் உற்பத்தியாகும் என்று இருக்கும் சொற்றொடரில் விளையும் பயன் என்று இருக்க வேண்டுமா அல்லது விழையும் பயன் என்று இருக்க வேண்டுமா? இரண்டுமே வெவ்வேறு பொருந்தமான பொருள் தரும். விழைதல் என்றால் விரும்புதல் என்பதால் விரும்பப்படும் பொருள் என்று கொண்டாலும் சரியே. விளையும் பொருள் என்றால் வேதி வினையால் உண்டாகும் பொருள் என்றும் பொருத்தமான பொருள் தரும். ஆகவே எப்பொருளில் நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்று அறிய அவா.--செல்வா 03:54, 9 திசம்பர் 2010 (UTC)Reply

செல்வா, இரண்டு சொற்றொடர்ப் பயன்பாட்டையும் நானும் முன்னர் எண்ணியிருக்கிறேன். இராம.கி அவர்களோடும் உரையாடியிருக்கிறேன். இவ்விடத்திலும் இரண்டும் பொருந்தும் என்றாலும், desired product என்பதற்கு இணையாக விழையும் பொருள் (விழைபொருள்) என எழுதினேன். Product என்பதற்கே நீங்கள் சொன்னது போல விளைபொருள் என்று கொள்ளலாம். (புதுக்கு என்பது இராம.கி அவர்களின் சொல்). அதோடு raw-material என்பதற்கு இயல் பொருள் எனச் சொல்லலாமா என்றும் எண்ணியதுண்டு. உங்கள் கருத்துக்களும் அறிய ஆவல். நன்றி. --இரா. செல்வராசு 04:06, 9 திசம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதி_வினைகலன்&oldid=645353" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேதி வினைகலன்" page.