வேதி வினைகலன்

வேதி வினைகலன் (Chemical Reactor) என்பது வேதி வினைகள் நிகழ்த்தப்படுவதற்காக உருவாக்கப்படும் கலன் ஆகும். வேதிப் பொறியியலின் இன்றியமையாத ஒரு உறுப்பாக வேதி வினைகலன்கள் உள்ளன. இவற்றை வடிவமைப்பதில் பல்வேறு வேதிப்பொறியியல் கூறுகள் பங்குபெறுகின்றன. வேதிவினையின் முடிவாய் விழையும் பொருள் அதிகளவில் உற்பத்தியாகும் வண்ணம் செயல்திறன் கொண்டதாய் இவை வடிவமைக்கப்படும்.[1][2][3]

வேதி வினைகலன்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

  • தொட்டி வினைகலன்
  • குழாய் வினைகலன்
ஒரு சிலுப்பிய தொட்டி வகை தொடர் வினைகலனின் உட்புறத் தோற்றம்

இவ்விருவகை வினைகலன்களுமே தொகுப்பு மற்றும் தொடர் வினைகளுக்கு பயன்படுத்த இயன்றனவாகும். வினைகலனின் பொதுவாக மூன்று வடிவமைப்பு வகைகள் உள்ளன. அவையாவன:

மேலும், வினையூக்கியூடிய வினைகலன்கள் பல சிறப்பு வினைகளுக்குத் தேவைப்படுகின்றன. இவை மேற்கண்ட மூவகை வடிவைப்பில் ஏதாவதொரு வகையினதாயிருக்கும். வினைகலன்களில் நிகழ்ந்தேறும் வினைகளை, மாற்றும் காரணிகளாவன:

  • வினைநேரம்
  • கொள்ளளவு
  • வெப்பநிலை
  • அழுத்தம்
  • வினைபொருட்களின் செறிவு
  • வெப்ப மாற்ற கெழுக்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Pereira, Carmo J.; Leib, Tiberiu M. (2008). "Section 19, Reactors". Perry's Chemical Engineer's Handbook (8th ed.). New York: McGraw-Hill. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071542265. இணையக் கணினி நூலக மைய எண் 191805887.
  2. Prud'homme, Roger (2010-07-15). Flows of Reactive Fluids (in ஆங்கிலம்). Springer Science+Business Media. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780817646592.
  3. Suresh, S.; Sundaramoorthy, S. (2014-12-18). Green Chemical Engineering: An Introduction to Catalysis, Kinetics, and Chemical Processes (in ஆங்கிலம்). CRC Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781466558854.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_வினைகலன்&oldid=4103521" இலிருந்து மீள்விக்கப்பட்டது