பேச்சு:வேப்பெண்ணெய்

தலைப்பு மாற்றம்

தொகு

வேப்பம் எண்ணெய் பொதுவாக வேப்பெண்ணெய் என்று அழைக்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அது சரியென்றால், தலைப்பை மாற்றலாம். --கலை (பேச்சு) 11:47, 25 மே 2013 (UTC)Reply

வேப்ப எண்ணெய் என்றிருந்ததை வேப்பம் எண்ணெய் என மாற்றினேன். வேப்பெண்ணெய் சரி என்றே படுகிறது. தமிழகத்தில் வேப்ப எண்ணெய் என எழுதுவார்களோ?--Kanags \உரையாடுக 11:52, 25 மே 2013 (UTC)Reply

==veppa yennai== yenpathu sari uthadugal uccharippathu yethuvo athu thalaipu aagathu. veppennai allathu veppa yennai ithil onru thalaipu. Thavarana thalaipai ida vendam. −முன்நிற்கும் கருத்து komara muthu (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வேப்பெண்ணெய் என்பது சொல்வதற்கும் எளிது. தமிழக வழக்கும் இதுவே. வேம்பு+எண்ணெய்=வேப்பெண்ணைய் -

(மாமரத்தை மாம்பழ மரம் என்போர் கூட வேப்பம் எண்ணெய் என்று சொல்வதில்லை) தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:34, 25 மே 2013 (UTC)Reply

வேம்பு+எண்ணெய்=வேப்பெண்ணைய் என்பது சரியென்றே எனக்கும் தோன்றுகின்றது. தமிழ் இலக்கணம் நன்கு அறிந்தவர்கள் இதனைச் சரிபார்த்துச் சொன்னால், தலைப்பை மாற்றலாம்.--கலை (பேச்சு) 22:52, 25 மே 2013 (UTC)Reply

நஞ்சு

தொகு

வேப்பெண்ணெயில் சிறிதளவு நச்சுத்தன்மை உள்ளதாக ஆங்கில விக்கியில் தந்திருக்கிறார்கள். யாராவது சரி பார்த்துச் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 22:44, 25 மே 2013 (UTC)Reply

நானும் இதனைப் பார்த்தேன். தேடியதில் இந்தப்] பக்கத்தைப் பாருங்கள். இன்னும் இதனை சரியாகத் தேடிப் பார்த்து அதுபற்றி கட்டுரையில் இணைக்கலாம் என நினைத்தேன்.--கலை (பேச்சு) 22:54, 25 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேப்பெண்ணெய்&oldid=1537451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேப்பெண்ணெய்" page.