பேச்சு:வேள்விக்குடி செப்பேடுகள்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இரவி CC-BY-SA 4.0 என்பதை இணைப்பின் அருகில் கொடுப்பதா? கட்டுரை பக்கத்தை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:37, 2 நவம்பர் 2016 (UTC)Reply

@தென்காசி சுப்பிரமணியன்:தற்போது நீங்கள் ஆக்குநர்சுட்டு தந்துள்ள முறை ஏற்புடையது. --இரவி (பேச்சு) 14:47, 2 நவம்பர் 2016 (UTC)Reply

@Ravidreams: இக்கட்டுரைக்கும் அதன் மூலத்திற்கும் உள்ளடக்கங்களில் எந்தவொரு மாறுபாடும் இல்லை, மூலத்தில் உள்ள எழுத்துப்பிழை கூட அப்படியே உள்ளது. துணைத் தலைப்புகளிலும் ஒன்றிரண்டே வேறுபடுகிறது. தென்காசியார் குறிப்பிடும் இந்த விதிமுறை பற்றி தெரியாதமையால் நீக்கல் வார்ப்புரு இட்டு விட்டேன்.

CC-BY-SA 4.0 இன் கீழ் உள்ளனவற்றை தவி கட்டுரைகளாக அப்படியே தரலாமா? அப்படியானால் தமிழ் இணைய கழகத்தில் உள்ளவற்றை தவியில் கட்டுரைகளாக மாற்றுவது மிகவும் எளிதாக இருக்குமே. இதற்கான விக்கிக் கொள்கைப் பக்க இணைப்பை எனது புரிதலுக்காக, எனக்குச் சுட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:06, 2 நவம்பர் 2016 (UTC)Reply

அப்டியே கொடுக்கலாம். ஆனால் அது தொடர்ந்து அப்டியே இருக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு இப்போ இந்த கட்டுரையில் த இ க க தளத்தில் எழுதிய பவானியின் கருத்துகள் மட்டுமே இருக்கும். ஆனா இச்செப்பேடுகள் குறித்த பலரின் (துறைசார் வல்லுநர்) கருத்துக்கள் தேவை. பலமுறை இந்த தகவல்கள் மாற்ற/குறைக்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:19, 2 நவம்பர் 2016 (UTC)Reply

இது குறித்து வேறோர் இடத்தில் எழுதியிருக்கிறேன். கட்டுரை விக்கி நடையில் எழுதப்பட வேண்டும். காப்புரிமை அற்ற மூலமானாலும், அதனை வரிக்கு வரி இங்கு தர முடியாது. அவ்வாறு தருவதானால், அதனை விக்கிமூலத்திலேயே தர வேண்டும். விக்கிப்பீடியாவில் அல்ல.--Kanags \உரையாடுக 20:38, 2 நவம்பர் 2016 (UTC)Reply
CC-BY-SA 4.0 கீழ் உள்ளதால் மட்டும் அக்கட்டுரை நம்பத்தகுந்ததா? மூலக் கட்டுரையில் எவ்விதமான உசாத்துணைகளும் தரப்படவில்லை. விக்கி கட்டுரையில் இது குறித்து மேலும் உசாத்துணைகள் தரப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:54, 3 நவம்பர் 2016 (UTC)Reply

@தென்காசி சுப்பிரமணியன்: \\அப்டியே கொடுக்கலாம். ஆனால் அது தொடர்ந்து அப்டியே இருக்கக்கூடாது\\ இது சரியான முறையாகத் தோன்றவில்லை. கட்டுரை உருவாக்கப்படும்போதே தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கான குறைந்தபட்ச அடிப்படை விதிகளை நிறைவு செய்யும் வடிவில் அமைவதே நல்லது. ”பின்னர் மாற்றிக் கொள்ளலாம்” என்பது, ’பின்னர்’ என்பதற்கான அளவினைக் கேள்விக்குறியாக்கிவிடும். கட்டுரையைத் தொடங்கிய பயனர்களால் ’பின்னர்’ அக்கட்டுரையை வளர்தெடுக்கவோ முறைப்படுத்த முடியாமலோ போகலாம். இதற்கு எடுத்துக்காட்டாக ஏற்கனவே பல கட்டுரைகள் தவியில் உள்ளன. துப்புரவுப் பணியினை இது அதிகப்படுத்தும். இது எனது தாழ்மையான கருத்து. --Booradleyp1 (பேச்சு) 04:41, 3 நவம்பர் 2016 (UTC)Reply

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். அதன் நடை, தர வரையறைகளுக்கு உட்பட்டு இன்னொரு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் இருந்தால் ஒழிய, தகுந்த பதிப்புரிமை உடைய மூலங்களாக இருந்தாலும் அப்படியே இங்கு வெட்டி ஒட்டுவது ஏற்புடையதன்று. இது நமக்கு முன்பு கொடையாக அளிக்கப்பட்ட பெ. தூரன் உருவாக்கிய கலைக்களஞ்சிய ஆக்கத்துக்கும் பொருந்தும். Booradleyp1 சொல்வது போல் முதன் முறை இங்கு இடும்போதே நமது வரையறைகளுக்கு ஏற்ப செப்பனிட்டு இடுவதே நன்று. தென்காசி சுப்பிரமணியனும் இதையே குறிப்பிடுகிறார். அப்படியே பயன்படுத்தாமல் கட்டுரையின் முழுமையின் பொருட்டு மேலும் பல தகவல் ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும் என்கிறார். இன்னொரு குறிப்பு, CC-BY-SA என்பதும் ஒரு பதிப்புரிமை தான். அதனைப் பதிப்புரிமை அற்றது என்று குறிப்பிடுடதல் கூடாது. இப்பதிப்புரிமையின் படி ஆக்குநர்சுட்டு அளிக்க வேண்டும். அதே உரிமையின் கீழ் பகிர வேண்டும் போன்ற விதிகள் உள்ளன. பொதுக்கள உரிமத்தில் உள்ளவை, பதிப்பித்த ஆண்டு அடிப்படையில் பதிப்புரிமை காலாவதி ஆனவற்றை மட்டும் பதிப்புரிமை அற்றவை என்று குறிப்பிடலாம். --இரவி (பேச்சு) 05:47, 3 நவம்பர் 2016 (UTC)Reply
//அப்படியே பயன்படுத்தாமல் கட்டுரையின் முழுமையின் பொருட்டு மேலும் பல தகவல் ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும் என்கிறார்.// இதை யார் செய்வது? இவ்வாறே ஏனைய CC-BY-SA 4.0 கட்டுரைகளையும் இங்கே தரவேற்றி விட்டு யாராவது அல்லது விரும்பியவர்கள் மேலும் மேற்கோள்கள் தருவார்கள் என சும்மா இருக்கலாமா? மூலக் கட்டுரை முழுக்க முழுக்க முனைவர் பவானி அவர்களின் சொந்தக் கட்டுரை போல் தான் தெரிகிறது. ஆய்வுக் கட்டுரையாகவும் இல்லை. ஆய்வுக் கட்டுரைகளில் உசாத்துணைகள் தருவார்கள். எங்கிருந்து தகவல்களை எடுத்தார் என்பது தரப்படவில்லை. செப்பேடுகளில் ஆய்வு செய்யும் தென்காசியாரே தகுந்த மேற்கோள்களுடன் கட்டுரையை மேம்படுத்த வேண்டும். வேறு யாரும் செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. அல்லது நீக்கும் படி பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:06, 3 நவம்பர் 2016 (UTC)Reply
Kanags, கட்டுரையின் உள்ளடக்கத்துக்கு பதிப்புரிமைச் சிக்கல் இல்லை என்பதைத் தவிர மற்ற எல்லா விதமான தர எதிர்பார்ப்புகளும் வழமை போல தான். சான்று தேவைப்படும் இடங்களில் சான்று கோரி வார்ப்புரு இடலாம். நன்றி. --இரவி (பேச்சு) 11:10, 3 நவம்பர் 2016 (UTC)Reply

Booradleyp1 இது துப்புரவு பணிகளை அதிகம் எல்லாம் படுத்தாது. ஆனால் இன்னொருவர் கருத்தைச்சேர்க்கும் போது இடை இடையே மாற்றம் செய்து எழுத வேண்டிவரும். எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன்.

முன்பெல்லாம் தமிழ் விக்கியில் தமிழ் எழுத்து பழமை குறித்து ஐராவதம் மகாதேவனின் கருத்துகள் நிரம்பியதாக மட்டும் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. பிற்பாடு நான் தமிழ் விக்கிக்கு வந்ததும் ஐராவதம் மகாதேவன் சொன்னது ஒரு தரப்பு கருத்து என்றும் இன்னொரு தரப்பு சொன்னது இன்னொரு தரப்பு கருத்து என்றும் சில மாற்றங்களை செய்து எழுதினேன். அது போலவே மற்றவர் கருத்துகள் வேள்விக்குடிச்செப்பேடுகள் பற்றி வரும் போது அதற்கான மாற்றங்களை செய்து தான் எழுத வேண்டும். இது எல்லாருக்கும் நிகழ்வது தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:55, 3 நவம்பர் 2016 (UTC)Reply

Return to "வேள்விக்குடி செப்பேடுகள்" page.