பேச்சு:ஹிஸ்புல்லா
கட்டுரையை தொடங்கியதற்கு நன்றி, மயூரன். இஸ்ரேல் - லெபனான் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை குறித்தும் யாரேனும் எழுதினால் செய்திகள் பகுதியில் தரலாம்--ரவி 22:46, 24 ஜூலை 2006 (UTC)
இவர்கள் பயங்கரவாதிகளா? சில நாடுகள் இவர்களை பயங்கரவாதிகள் என்கிறதே? இஸ்ரேலும் பயங்கரவாதிகள் என்கிறதே. ஏன் விக்கிப்பீடியா அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை? சார்பு நிலையா? :) 13:22, 11 ஆகத்து 2016 (UTC)
//அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரித்தானியாவும் ஹெஸ்புல்லாவை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன.// கட்டுரையில் இருப்பதை வாசிக்கவில்லையா?--Fasly (பேச்சு) 15:46, 11 ஆகத்து 2016 (UTC)
மீளமைக்கப்பட்ட தொகுப்பு
தொகு@AntanO:உரை திருத்தம் உட்பட பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருந்த இத்தொகுப்பு ஏன் உரையாடல் இன்றி மீள்விக்கப்பட்டது, ஏன் ஒரே ஒரு தொகுப்பைச் செய்த பயனருக்கு Unconstructive editing என்று எச்சரிக்கை செய்தி இடப்பட்டது என்று அறிய விரும்புகிறேன். --இரவி (பேச்சு) 06:33, 4 சூன் 2017 (UTC)
- அது மீள்வித்தல் இல்லை, முன்நிலையாக்கப்பட்டது. மீள்வித்தல் அல்லது முன்நிலையாக்கல் ஏன் செய்யப்படுகிறது? அவற்றக்கான வழிகாட்டல் என்ன?--AntanO 06:52, 4 சூன் 2017 (UTC)
- ஒரு பயனர் செய்த தொகுப்பைத் தகுந்த உரையாடல் இன்றி முற்றிலும் நீக்கி இருப்பதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளீர்கள். இதற்கான காரணம் அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:05, 4 சூன் 2017 (UTC)
- ஒரு பயனர் செய்த தொகுப்பைத் தகுந்த உரையாடல் இன்றி முற்றிலும் நீக்க முடியாதா? --AntanO 07:08, 4 சூன் 2017 (UTC)
- தொகுப்பின் தன்மையைப் பொருத்து முற்றிலும் நீக்கலாம். அல்லது, பகுதி மாற்றங்களைத் தக்க வைக்கலாம். ஆனால், இது தொடர்பாக உரையாடல் பக்கத்தில் காரணம் கோரும் போது விளக்குவதும் முறையாகும். --இரவி (பேச்சு) 07:11, 4 சூன் 2017 (UTC)
இங்கும் தொகுப்பின் தன்மைக்கு ஏற்பவே முன்நிலையாக்கப்பட்டது. எ.கா: ஹெஸ்புல்லா என்பது லெபனான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக இயக்கமாகும். ஹெஸ்புல்லா சமூக இயக்கமா? த.வியில் எல்லோரும் காரணம் கேட்டுத்தான் முன்நிலையாக்குகிறார்களா? அல்லது என் தொகுப்புகளில் பிழை தேடுகிறீர்களா? அல்லது மற்றவர்களிடமும் இவ்வாறு கேள்வி கேட்பீர்களா? --AntanO 07:17, 4 சூன் 2017 (UTC)
- ஹெஸ்புல்லாவின் சமூகசேவை என்று கட்டுரைக்குள் ஒரு தனி பத்தியே இருக்கும் போது, நடுநிலைக் கொள்கையின் கீழ் இதனைப் பற்றி உரையாட இடம் இருக்கிறதா இல்லையா? மற்ற மாற்றங்கள் தொடர்பாக கீழே வேறுபாடு என்ற தலைப்பில் உரையாடுவோம். கடந்த ஒரு மாதமாகத் துப்புரவுப் பணியின் காரணமாக நான் பல்வேறு பயனர்களுக்கு இட்டு வரும் செய்திகளைக் காணலாம். நன்றி. --இரவி (பேச்சு) 07:46, 4 சூன் 2017 (UTC)
சமூகசேவை செய்கிறது என்பதற்காக சமூக இயக்கம் என்று கருதலாமா? சமூக இயக்கங்கள் என்ற பகுப்பையும் உருவாக்கவிடலாமா? --AntanO 07:53, 4 சூன் 2017 (UTC)
- இங்கு உரையாடலுக்கு இடம் உண்டு என்பதே நான் சுட்டு விரும்புவது. உரையாடலின் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். --இரவி (பேச்சு) 08:00, 4 சூன் 2017 (UTC)
வேறுபாடு
தொகு117.246.254.126 | முன்னிலையாக்கம் | தலைப்பு எழுத்துக்கள் |
---|---|---|
ஹெஸ்புல்லா என்பது லெபனான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக இயக்கமாகும். | ஹெஸ்புல்லா என்பது லெபனான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் இயக்கமாகும். | சமூக இயக்கமா? |
மே 2006 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து | மே 2000 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து | மே 2006 இல் வெளியேறியதா? |
தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சி, கருவியேந்திய போராளிகள்படை, சமூகப் பணிகளை முன்னெடுக்கும் அமைப்பு என மூன்று முகங்களைக் கொண்டதாக உள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பினை எதிர்கொள்ளும் நோக்கத்தில் உருவானது. | லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது. | எது சரி |
இதன்மூலம் இது லெபனானின் தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. | தேசிய இயக்கமா? |
மேலேயுள்ள வேறுபாடுகளில் ஐ.பி பயனர் மேற்கொண்ட தொகுப்பில் பிழைகள் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் த.வி. பயனர் என்ன செய்ய வேண்டும்? --AntanO 07:40, 4 சூன் 2017 (UTC)
- இப்பிழைத் தொகுப்பைச் செய்த பயனருக்கு இடப்பட்ட செய்தி "வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி." - இவ்வாறு வார்ப்புரு இட்டால் பிழையா? அல்லது வேறு என்ன செய்யலாம்? --AntanO 07:50, 4 சூன் 2017 (UTC)
ஹெஸ்புல்லாவின் சமூகசேவை என்று கட்டுரைக்குள் ஒரு தனி பத்தியே இருக்கும் போது, நடுநிலைக் கொள்கையின் கீழ் இதனைப் பற்றி உரையாட இடம் இருக்கிறதா இல்லையா?
- 2006 பெலனான் போர் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
- தேசிய இயக்கம் என்பதை எப்படி வரையறுக்கலாம்?
- உரையாடலுக்கு இடம் உள்ள இது போன்ற தொகுப்புகளை எடுத்த எடுப்பில் ஆக்கநோக்கம் இல்லை / Unconstructive editing என்று எச்சரிப்பது வரவேற்புக்குரியதன்று. வார்ப்புரு சரி. பயன்படுத்திய இடம் தவறு. --இரவி (பேச்சு) 07:54, 4 சூன் 2017 (UTC)
- உரையாடலுக்கு இடம் உள்ள என்பதற்கான ஆதாரமற்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்வீர்களா? ஆம் என்றால் சில கட்டுரைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறேன் உரையாடலாம். --AntanO 08:02, 4 சூன் 2017 (UTC)
- ஒரு புதுப்பயனர் விக்கிக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்து கொண்டு செயற்பட பயிற்சியும் உதவியும் நல்க வேண்டும். புதியவர் விடும் பிழைகளை நெடுநாள் பயனர்களும் செய்ய விட வேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது.
- இங்கு நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் அறிய விரும்புகிறேன். 2006 பெலனான் போர் என்பது இசுரேல் லெபனானில் 2006ல் சண்டையிட்டது என்பதை அல்லவா காட்டுகிறது. அப்படி எனில், ஏன் கட்டுரையில் 2000 என்று இருப்பது சரியாகும்? இது குறித்து விளக்கினால் புரிந்து கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:08, 4 சூன் 2017 (UTC)
- //Clashes followed the withdrawal of Israeli troops from South Lebanon in 2000, which Hezbollah viewed as incomplete due to the presence of Israeli troops in the disputed Shebaa farms. Fighting came to an end after the 2006 Lebanon War.// எசுபுல்லா குறித்த ஆங்கிலக் கட்டுரையும் 2006 காலக்கோட்டைத் தொட்டுச் செல்கிறது. தமிழில் உள்ள கட்டுரையை விரிவாக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 08:20, 4 சூன் 2017 (UTC)
- மே 2000 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து இவ்வெளியேற்றத்திற்கான காரணமாக பரந்தளவில் கருதப்பட்டது ஹெஸ்புல்லாவின் போராட்டமேயாகும்.
- Hezbollah waged a guerilla campaign in South Lebanon and as a result, Israel withdrew from Lebanon on May 24, 2000--AntanO 08:26, 4 சூன் 2017 (UTC)