பேச்சு:ஹெறாத் நகரம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இக்கட்டுரை 2015 விக்கிப்பீடியா ஆசிய மாதத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது. |
ஹெறாத் என்றே இருக்கிறது. ஹேரத் அல்ல.--பாஹிம் (பேச்சு) 06:03, 3 நவம்பர் 2015 (UTC)
- பாகிம், இது இலக்கண முறைப்படியா எழுதியுள்ளீர்கள். இச்சொல்லைத் தமிழில் என்னால் உச்சரிக்க முடியவில்லை. அரபுத் தமிழ் போல் உள்ளது. ஹெராத் அல்லது எராத் என்று எழுதுவதே தமிழ் முறை.--Kanags \உரையாடுக 07:02, 3 நவம்பர் 2015 (UTC)
உங்களால் ஹெ என்பதை உச்சரிக்க முடியும் என்பதை நீங்களே மேலே குறிப்பிட்டுள்ளீர்கள். றா என்பது தமிழெழுத்துத்தான். அதை மொழிவது எப்படியென்று உங்களுக்குத் தெரியாதோ? இலக்கணப்படி எழுதுவதாயின் எறாத்து என்றிருக்க வேண்டும். அறபுத் தமிழில் எழுதுவதாயின் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை. ஹெறாத் அல்ல ஹெராத் என்பது தமிழ் முறையா? எப்படி? சற்று விளக்கினால் கற்றுக் கொள்வேன்.--பாஹிம் (பேச்சு) 07:23, 3 நவம்பர் 2015 (UTC)
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "ஹெறாத் நகரம்" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மேலும் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 010 2016 15:00, (UTC)