பேச்சு:2016 மகாமகம்

புதிய தலைப்பு

தொகு

மகாமகம் என்ற தலைப்பில் பொதுவான கட்டுரை இருந்தாலும், 2016 மகாமகம் குறித்து அதிகமான செய்திகளும், புகைப்படங்களும் சேர்க்கப்படவேண்டியிருப்பதால் இக்கட்டுரை தனியாகத் துவங்கப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் நிகழ்வு என்ற நிலையில் அவ்வப்போது செய்திகள் சேர்க்கப்படும். உரிய திருத்தங்களும் மேற்கொள்ளப்படும். களப்பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சேர்க்கப்படவுள்ளன. இப்பதிவு சிறப்பாக அமைய ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:49, 5 பெப்ரவரி 2016 (UTC)

குடமுழுக்கு

தொகு

17 கோயில்களுக்கும் நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்கள் குடமுழுக்கு தலைப்பில் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை குடமுழுக்கு நடைபெற்ற நாளன்று அந்தந்தக் கோயில்களுக்குச் சென்றபோது எடுக்கப்பட்டவையாகும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:27, 5 பெப்ரவரி 2016 (UTC)

மகாமகம் 2016 லோகோ

தொகு

மகாமகம் 2016க்கான லோகோ எனப்படும் அடையாளச்சின்னத்தை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன். இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன். இக்கட்டுரையில் இது இருக்கவேண்டும் என்ற நிலையில் இதனைச் சேர்த்தேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:43, 5 பெப்ரவரி 2016 (UTC)

சரஸ்வதி மகால் நூலக மகாமக மலர்

தொகு

இம்மலர் இன்று காலை பெறப்பட்டது. தொடர்புடைய விவரங்கள் தனியாகப் பதியப்பட்டுள்ளன. முதன்மைக் கட்டுரையில் தேவை என்ற நிலையில் சுருக்கமாக படத்துடன் தரப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:11, 15 பெப்ரவரி 2016 (UTC)

சிறப்பு அஞ்சல் உறைகள், அஞ்சல் அட்டை

தொகு

மகாமகம் 2016க்காக வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறைகள், அஞ்சல் அட்டை ஆகியவை கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் வாங்கப்பட்டன. இவற்றை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன். இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன். பொருத்தமில்லை, விதிக்கு ஒவ்வாது என்ற நிலையில் அமைந்தால் ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:18, 20 பெப்ரவரி 2016 (UTC)

மகாமகத்திற்கு சிறப்பு காலண்டர்கள்

தொகு

மகாமகம் 2016க்காக அறநிலையத்துறை சார்பில் 12 சைவக்கோயில்களின் உற்சவமூர்த்திகள் மற்றும் ஐந்து வைணவக்கோயில்களின் உற்சவமூர்த்திகளின் புகைப்படங்களைக் கொண்ட மாத காலண்டர்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டன. இவற்றை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன். இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன். பொருத்தமில்லை, விதிக்கு ஒவ்வாது என்ற நிலையில் அமைந்தால் ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:18, 20 பெப்ரவரி 2016 (UTC)

Not OK for 2D (paintings, drawings, maps, pictures, engravings, etc.) --AntanO 14:48, 20 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம், AntanO. செய்தி அறிந்தேன். நன்றி.

வணக்கம், AntanO. மேற்கண்ட இனங்களுடன் கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் (நூல்) என்பதற்கான நூலட்டையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இது தமிழக அரசு இந்து அறநிலையத்துறை வெளியிட்ட மகாமகத்தின் சிறப்பு மலருக்கான நூலின் அட்டையாகும். புகைப்படப்பதிப்புரிமையில் நூலட்டை என்ற நிலையில்தான் சேர்த்திருந்தேன். மாறுபட்டோ, தவறாகவோ சேர்க்கவில்லை என்று எண்ணுகிறேன். இந்த நூலின் அட்டையை உரிய இடத்தில் சேர்க்க ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:00, 20 பெப்ரவரி 2016 (UTC)

நூலின் அட்டை சேர்க்கப்பட்டமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:58, 21 பெப்ரவரி 2016 (UTC)

புகைப்படங்கள்

தொகு

மகாமக நிறைவு நாளன்று எடுக்கப்பட்ட தேர், மகாமகக்குளம் தொடர்பான புகைப்படங்கள் விரைவில் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:28, 24 பெப்ரவரி 2016 (UTC)

தீர்த்தவாரி அன்று கும்பகோணம் மகாமகக்குளத்திற்கு குடும்பத்துடன் நேரில் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:33, 27 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி

தொகு

தீர்த்தவாரி (22 பிப்ரவரி 2016)அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவிற்காகச் சென்றபோது மகாமகக்குளம், பொற்றாமரைக்குளம், காவிரியாறு மற்றும் 10க்கும் மேற்பட்ட சைவ மற்றும் வைணவக் கோயில்களுக்கும் சென்றோம். லட்சக்கணக்கான மக்களோடு வரிசையில் நின்ற கொண்டிருந்தபோது தீர்த்தவாரிக்காக சென்ற பல்லக்குகளையும் காணமுடிந்தது. அண்மையில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் பெரும்பாலான கோயில்களில் தேர்களும் காணப்பட்டன. சுமார் 10 கிமீ தொலைவு நடந்து முடிந்தவரை புகைப்படங்களை எடுத்து இணைத்துள்ளேன். கட்டுரை முழுமை அடையவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறாக தனி முயற்சி எடுத்து புகைப்படங்களைச் சேர்த்துள்ளேன். செய்திகளையும் முடிந்தவரை விடாமல் சேர்க்க முயற்சி மேற்கொண்டேன். கட்டுரை இந்த அளவு அமைய உதவிய அனைவருக்கும் நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:54, 27 பெப்ரவரி 2016 (UTC)

கருத்து

தொகு

ஜம்புலிங்கம், இக்கட்டுரை குறித்து எனது கருத்துகள்:

  • இக்கட்டுரை 2016 மகாமகம் பற்றியது. அப்படியிருக்கையில், இக்கட்டுரையின் ஆரம்பப் பகுதி கும்பகோணம் மகாமகம் பற்றியே எழுதப்பட்டுள்ளது. அல்லது கும்பகோணத்தில் மட்டும் தான் மகாமகம் கொண்டாடப்படுகிறதா? தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. இவ்வாறான விக்கிப்பீடியா கட்டுரைகளில் ஆரம்ப அறிமுகம் முழுக் கட்டுரையினதும் சுருக்கமாக இருக்க வேண்டும்.
  • மகாமகம் முடிந்து விட்ட நிலையில், கட்டுரை இறந்த காலத்தில் எழுதப்பட வேண்டும்.
  • தொடர்புடைய ஏற்பாடுகள் என்ற பகுதியில் உள்ள நிகழ்வுகள் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டன? தமிழகம் முழுவதிலுமா?

--Kanags \உரையாடுக 21:23, 27 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம், Kanags. தாங்கள் கூறியுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொண்டேன். தாங்கள் கூறியபடி ஆரம்ப அறிமுகம் முழுக்கட்டுரையின் சுருக்கமாக அமைப்பேன், கட்டுரையை இறந்த காலத்திற்கு மாற்றுவேன், கும்பகோணத்தில் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது. உரிய திருத்தங்களை விரைவில் செய்துவிட்டு ஐயமிருப்பின் உரையாடுவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:15, 28 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம், Kanags. இன்று பெரும்பாலான பகுதியைத் திருத்தியுள்ளேன். இன்னும் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளேன். கூடுதல் விவரங்களைச் சேர்க்கவுள்ளேன். பின்னர் தங்களுடன் உரையாடுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:12, 5 மார்ச் 2016 (UTC)

மகாமகம் லோகோ தொடர்பு

தொகு

AntanO. மகாமகம் 2016 லோகோவை பயன்படுத்தியது தொடர்பாக வினா எனது பயனர் பேச்சுப்பக்கத்தில் வினா எழுப்பியுள்ளார். மகாமகம் 2016க்கான லோகோ எனப்படும் அடையாளச்சின்னத்தை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன், இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை, இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன் என்று கேட்டு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த லோகோவைப் பதிவு செய்த நாளில் வினா எழுப்பியிருந்தேன். இக்கட்டுரையில் இது இருக்கவேண்டும் என்ற நிலையில் இதனைச் சேர்த்தேன் என்றும் கூறியிருந்தேன். காப்புரிமை மீறலின்றி இந்த லோகோ கட்டுரையில் அமைய ஆவன செய்ய வேண்டுகிறேன். 12 வருடத்திற்கொரு முறை நிகழும் இந்நிகழ்வுக்கு இந்த முறை இந்த லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மறமொழியை அவருக்குத் தெரிவித்துள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:23, 28 பெப்ரவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2016_மகாமகம்&oldid=2033569" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "2016 மகாமகம்" page.