பேதோங்தான் சினவத்ரா

தாய்லாந்து பிரதமர்

பேதோங்தான் சினவத்ரா (Paetongtarn Shinawatra, தாய் மொழி: แพทองธาร ชินวัตร; Phaethongthan Chinnawat; பிறப்பு: 21 ஆகத்து 1986) என்பவர் தாய்லாந்து அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். இவர் 2024 ஆகத்து முதல் தாய்லாந்துப் பிரதமராகப் பதவியில் உள்ளார். 2023 ஆம் ஆன்டு முதல் புவா தாய் கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார். சினவத்ரா அரசியல் குடும்பத்தின் ஓர் உறுப்பினரான இவர், 2001 முதல் 2006 வரை பிரதமராகப் பணியாற்றிய தக்சின் சினவத்ராவின் இளைய மகளும், 2011 முதல் 2014 வரை பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவின் மருமகளும் ஆவார்.[1][2] தாய்லாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் பிரதமராக பதவியேற்றவரும், இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்.[3]

பேதோங்தான் சினவத்ரா
Paetongtarn Shinawatra
2023 இல் சினவத்ரா
தாய்லாந்து பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 ஆகத்து 2024
ஆட்சியாளர்வச்சிரலோங்கோன்
புவா தாய் கட்சி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 அக்டோபர் 2023
முன்னையவர்சுசாக் சிறினில் (பதில்)
சொல்னான் சிறீகெவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஆகத்து 1986 (1986-08-21) (அகவை 38)
பேங்காக், தாய்லாந்து
அரசியல் கட்சிபுவா தாய்
துணைவர்
பித்தாக்கா சுக்சாவாத் (தி. 2019)
பிள்ளைகள்2
பெற்றோர்
  • தக்சின் சினவாத்ரா (தந்தை)
  • பொத்சாமன் நா பொம்பெச்ரா (தாய்)
உறவினர்
கல்வி
  • சுலாலங்கோர்ன் பல்கலைக்கழகம் (இ.க)
  • சரே பல்கலைக்கழகம் (முதுகலை)
வேலை
  • அரசியல்வாதி
  • தொழிலதிபர்
கையெழுத்து
புனைப்பெயர்உங் இங்

2024 ஆகத்து 14 அன்று தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் சிரெத்தா தவசின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பின் பேதோங்தான் சினவத்ரா புவா தாய் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.[4] அவரது நியமனம் ஆகத்து 16 அன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "New Shinawatra may lead the next quest for power as Pheu Thai aims for 14 million members". Thai Examiner (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-03-21. Archived from the original on 3 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
  2. "Young Shinawatra appointed Pheu Thai chief adviser for innovation". Bangkok Post இம் மூலத்தில் இருந்து 16 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240816071416/https://www.bangkokpost.com/thailand/politics/2205667/young-shinawatra-appointed-pheu-thai-chief-adviser-for-innovation. 
  3. "Paetongtarn Shinawatra becomes Thailand's youngest prime minister" (in en). CNBC. 16 August 2024 இம் மூலத்தில் இருந்து 16 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240816071413/https://www.cnbc.com/2024/08/16/paetongtarn-shinawatra-becomes-thailands-youngest-prime-minister.html. 
  4. "Thailand's Pheu Thai party picks Paetongtarn Shinawatra as PM candidate" (in en). France 24. https://www.france24.com/en/asia-pacific/20240815-thailand-s-pheu-thai-party-picks-paetongtarn-shinawatra-as-pm-candidate. 
  5. "Thai lawmakers elect Thaksin's daughter Paetongtarn Shinawatra as PM". France 24. August 16, 2024. Archived from the original on 16 August 2024. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  6. "Ex-PM's daughter picked as youngest ever Thai leader". BBC. August 16, 2024. Archived from the original on 16 August 2024. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதோங்தான்_சினவத்ரா&oldid=4096581" இலிருந்து மீள்விக்கப்பட்டது