வச்சிரலோங்கோன்

தாய்லாந்து மன்னர்

வச்சிரலோங்கோன் (Vajiralongkorn, தாய்: วชิราลงกรณ; Wachiralongkon), ஆட்சிப் பெயர்: பிரபாத் சோம்தெத் பிரா வஜிர கிளாவோ சாவோ யூ குவா (Phrabat Somdet Phra Vajira Klao Chao Yu Hua), பிறப்பு: 28 சூலை 1952),[2] தாய்லாந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச், அரசி சிறிக்கித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். 1972 இல், இவரது 20-வது அகவையில் அவரது தந்தையினால் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 2016 அக்டோபர் 13 இல் தந்தை இறந்த பின்னர் 2016 திசம்பர் 1 இல் தாய்லாந்து அரசராக முடிசூடினார்.[1][3][4][5] இவரது முடிசூட்டு விழா 2019 மே 4 முதல் 6 வரை நடைபெற்றது.[6] சக்கிரி வம்சத்தின் 10-ஆவது மன்னரான இவர் பத்தாவது இராமா என்றும் அழைக்கப்படுகிறார்.[7]

வச்சிரலோங்கோன்
தாய்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம் 13 அக்டோபர் 2016[1] -
முடிசூடல் 4 மே 2019
முன்னையவர் பூமிபால் அதுல்யாதெச்
குடும்பம் மகிதோல் அரண்மனை
சக்ரி வம்சம்
தந்தை பூமிபால் அதுல்யாதெச்
தாய் சிரிக்கித்
பிறப்பு 28 சூலை 1952 (1952-07-28) (அகவை 69)
தாய்லாந்து
சமயம் பௌத்தம்
வச்சிரலோங்கோன்
"தாய்" மொழிப் பெயர்
தாய் มหาวชิราลงกรณ
RTGS மகா வஜிரலோங்கோன்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சிரலோங்கோன்&oldid=3289608" இருந்து மீள்விக்கப்பட்டது