பேரி
பேரி | |
---|---|
European Pear branch with fruit | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | பைரசு |
இனங்கள் | |
ஏறத்தாழ 30 இனங்கள்; கட்டுரையில் பார்க்கவும். |
பேரி எனப்படுவது ஒரு தாவரப் பேரினத்தையும் அத்தாவரத்தின் உண்ணத்தக்க பழத்தையும் குறிக்கும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தப் பழம் ஒவ்வாமைத்தன்மை மிகக் குறைந்த, விட்டமின், நார்ப் பொருள் மிக்க உணவாகும்.[1][2][3]
வரலாறு
தொகுகுளிரான மிதவெப்பத் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பேரி மரம் மிகப் பழைய காலம் தொட்டே பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் பழம் உணவாகப் பயன்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றுக்கு முந்திய காலம் முதலிருந்தே கிடைக்கின்றன. சுவிசு ஏரிக் குடியிருப்புக்களில் இதன் தடயங்கள் கிடைத்துள்ளன. இதைக் குறிக்கும் "பியர்" என்னும் சொல் அல்லது அதையொத்த சொற்கள் எல்லா செல்டிய மொழிகளிலும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "pyriform, adj". Oxford English Dictionary. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "pĭrus".. (1879). Clarendon Press.
- ↑ Charles du Fresne, sieur du Cange "PYRUS"..