பேரூர் கிருஷ்ணசுவாமி கோயில்

பேரூர் கிருஷ்ணசுவாமி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் முனிசிபல் கார்ப்பரேஷpனில் அம்பலமுக்கு அருகே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.  திருவனந்தபுரம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. இது ஒரு கிருஷ்ணன் கோயிலாகும். இது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பேரூர்கடை என்ற ஊரின் பெயர் இக்கோயிலின் பெயரால் வந்தது. இக்கோயில் தெக்கன் (தெற்கு) குருவாயூர் என்றும் அழைக்கப்படுகிறது.

தெய்வங்கள் மற்றும் துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலின் மூலவர் கிருஷ்ணர் ஆவார். துணைத்தெய்வங்கள்கணபதி, சிவன், பகவதி, ஐயப்பன், முருகன், நாகர்கள் மற்றும் நவகிரகங்கள் ஆகியோர் ஆவர்.

திருவிழாக்கள்

தொகு

ஆண்டு விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. மலையாள மாதமான மீனத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தொடங்கும் விழா, பத்தாம் நாள் ஆராட்டுக்குள் முடிவடைகிறது. சாஸ்தாமங்கலம் மகாதேவர் கோயில் வளாகத்தில் ஆராட்டு சடங்கு நடைபெறுகிறது. மாலையில் கோயிலில் இருந்து கண்கவர் ஊர்வலம் பேரூர்கடை, பைபின்மூடு சந்திப்பு, [1] கடப்பத்தலா நகர், கவுடியார், அம்பலமுக்கு சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைகிறது. கிருஷ்ண ஜெயந்தி, [2] மண்டலம், மகர விளக்கு சீசன் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

காணிக்கை

தொகு

பாயாசம், பால்பாயாசம் (இனிப்பு கலந்த பால் கஞ்சி), அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, (புஷ்ப பிரசாதம்), நீரஞ்சனம், முழங்காப்பு, கணபதி ஹோமம், பகவதி ஹோமம் உள்ளிட்ட காணிக்கைகள் வழங்கப்படுகின்றன. திருவிழா நாட்களில் அன்னதானம் (விருந்து) செய்யப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sasthamangalam Mahadevar temple
  2. Krishna Janmashtami