பேரையூர் இருளப்பசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பேரையூர் இருளப்பசாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ள கோயிலாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரின் கண்மாய்க்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

அருள்மிகு இருளப்பசாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):நிறைகுளத்து அய்யனார்
பெயர்:இருளப்பர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:பேரையூர், கமுதி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முதுகுளத்தூர்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:இருளப்பசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:முளைப்பாரி
உற்சவர்:முருகன், பிள்ளையார்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இது ஒரு கிராமக் கோயில் ஆகும். ஆகவே நாள்தோறும் அனைத்து சமூகத்தினரும் பக்தியுடன் வழிபட்டுச் செல்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை களியாட்டம் என்ற முளைப்பாரித் திருவிழா இங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்புகைப்படம் கோவிலின் பழைய புகைப்படம் ஆகும்.

 
முளைப்பாரி திருவிழா

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் இருளப்பசாமி சன்னதியும், முருகன், விநாயகர், கருப்பணசுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் பேரையூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது.இக் கோயிலின் தல விருட்சமாக 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. மேலும் இக்கோவிலைச்சுற்றிலும் வில்வம், விளாமரம், மருத மரம்,நாகலிங்கம் மற்றும் மலைவேம்பு போன்ற மரங்கள் உள்ளன.   [2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் முளைப்பாரி முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்தத் திருவிழா ஒருவார காலம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இதில் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் மற்றும் முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இப்புகைப்படம் 1937 ஆம் ஆண்டு பேரையூர் மக்கள் கொண்டாடிய மாபெரும் களியாட்டம் என்ற முளைப்பாரித் திருவிழா ஆகும்.  

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் February 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் February 19, 2017.