பேஸிக்லினக்ஸ்
பேஸிக்லினக்ஸ் சிறியதோர் லினக்ஸ் வழங்கல். இது டாஸ் இயங்குதள (16 பிட் கோப்பு முறையா - FAT 16) வன்வட்டில் இருந்தோ இரண்டு நெகிழ்வட்டில் இருந்தோ (12 பிட் கோப்பு முறை - FAT 12) இல் இருந்தோ மிகப்பழைய வன்பொருட்களில் இருந்து (4 மெகாபைட் அல்லது இரண்டு காலி நெகிழ்வட்டில் இருந்தோ இயங்கக்கூடியது. பேஸிக்லினக்ஸ் அல்லது பிஎல் லினக்ஸ் 3 பெரிய பதிப்புக்களில் கிடைக்கின்றது.
பேஸிக்லினக்ஸ் பழையகணினிகளுக்கென்றே உருவாக்கப்பட்டது. இது சிறியதோர் கேணலையும் குறைவான நினைவகத்தையும் (RAM) பாவிக்கின்றது. இதில் இணையத்தில் உலாவுதல் மின்னஞ்சல் செய்தல் மற்றும் எக்ஸ்ரேமினாலாகவும் செயற்படுத்தலாம். இதன் தற்போதைய பதிப்பானது பிரதானமாகப் பழைய மடிக்கணினிகளுக்கே பொருத்தமானது. இதில் PCMCIA வசதிகளுடன் மாஜிக்பாயிண்ட் (மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் போன்றதோர்) கருவியையும் உள்ளடக்கியுள்ளது.
பதிப்புக்கள்
தொகுஇதன் தற்போதைய பதிப்பான 3.40 இரண்டு பதிப்புக்களாக வெளிவருகின்றது. ஒன்று டாஸ் வகிர்வுகளில் (FAT 16 கோப்பு முறையிலமைந்த ஹாட்டிஸ்கில்) இருந்தும் நெகிழ்வட்டில் இருந்தும் ஆரம்பிக்ககூடியதோடு லினக்ஸ் கோப்புமுறையிலமைந்த ஹாட்டிஸ்கில் இருந்தும் இவை ஆரம்பிக்கலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுவெளியிணைப்பு
தொகு- பேஸிக்லினக்ஸ் (ஆங்கில மொழியில்)
- Bootable floppy ஒன்றை Bootable CD ஆக்குவது எப்படி? மயூரனின் வலைப்பதிவு. (தமிழில்)