மடிக்கணினி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க அளவிலும், வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய கணினி ஆகும்.[1] இதில் கணித்திரையை மடித்து மூடிவைக்கக்கூடியதாக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று பெயர்.
மடிக்கணினியானது மேசைக்கணினியின் கணினியின் உள்ளீடுகளான திரை, விசைபலகை, சுட்டி, ஒலிபெருக்கி, இணையப் படக்கருவி, ஒலிவாங்கி, வரைகலை அட்டை போன்ற அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மடிக்கணினியானது ஒரு மாறுமின்னோட்ட தகைவி மூலமாக நேரடி மின்சாரத்தினைக் கொண்டு அல்லது மீள மின்னேற்றக்கூடிய மின்கலம் மூலமாக இயக்கப்படுகிறது. தற்பொழுது பயனாளர்களுடைய வாங்கும் விலை, விருப்பத்தின் பேரில் உட்பொதிந்த மென்பொருள் மற்றும் வன்பொருள்கள் பொதிந்த மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
முதல் தமிழ் கணினி:
சென்னையை சேர்ந்த டி.சி.எம் புரோட்க்சு நிறுவனத்தால் முதல் தமிழ் கணினி உருவாக்கப்பட்டது. அதன் பெயர் திருவள்ளுவர் ஆகும். இன்றளவும் தமிழக அரசினால் பயன்படுத்தப்படுகிறது.
கால மாற்றம்
தொகுமடிக்கணினியின் ஆரம்ப காலகட்டமானது 1980 இல் ஆரம்பித்தது. அப்பொழுது அதன் அளவும், எடையும் அதிகமாக இருந்தது. பின்வந்த காலங்களில் அதன் அளவு, எடையைக் குறைக்க திட்டமிடப்பட்டு செயற்படுத்தியதனால் தற்போது ஏ4 கடதாசி அளவுள்ள மடிக்கணினிகள் கிடைக்கின்றன. தற்பொழுது கணினி விளையாட்டுக்களுக்காகப் பயன்படுத்தப்படும் மடிக்கணினியான ஏலியன்வேர் மட்டுமே எடை அதிகமாக உள்ளது. சராசரியாக நான்கு முதல் ஐந்து கிலோகிராம் வரை இருக்கும்.[சான்று தேவை]
தோற்றம்
தொகுமுதல் மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 இல் வடிவமைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1982 இல் வெளியிடப்பட்டது. மடிக்கணினிகள் தொழில்நுட்ப நோக்கில் செயல்படுத்தும் முன்பாகவே அது பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர் முன்வைத்த டைனாபுக் என்ற எண்ணக்கரு அத்தகையதொன்றாகும். முதன்முதலில் வணிக நோக்கில் கிடைக்கப்பெற்ற மடிக்கணினி 1981 இல் அறிமுகமான ஒஸ்போர்ன் 1 என்பதாகும். இன்றைய மடிக்கணினிகள் எடையில் பெரும்பாலும் 2.3 கிலோகிராம் முதல் 3.2 கிகி (5 முதல் 7 பவுண்டு வரை இருக்கும். ஆனால் 1.3 கிலோகிராம் அளவு குறைந்த எடை உள்ளனவும் விற்கின்றார்கள். கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செமீ (14.1 அங்குலம் முதல் 15.4 அங்குலம் வரை) மூலைவிட்ட அளவு கொண்டிருக்கும். ஆனால் இன்னும் சிறிய திரைகள் உள்ளனவும் (30.7 செமீ அல்லது 12.1 அங்குலம் உடையனவும் அதனைவிட சிறியனவும்) உண்டு. பெரும்பாலான கணித்திரைகள் நீர்மவடிவப் படிகத் திரைகளால் ஆனவை. இத்திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் பின்னிருந்து இயக்கிக் கட்டுறுத்தும் மின்சுற்றுகள் மெல்லிய சீருறா சிலிக்கானால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்களால் ஆனவை. இவற்றை ஆக்டிவ் மாட்ரிக்ஸ் தின் வில்ம் டிரான்சிஸ்டர் என்று கூறுவார்கள். இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதனால், தனியான மின்வாய் (மின்னாற்றல் தரும் ஒரு மின்கலம்) தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருக்கின்றன.
ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி என்னும் அமைப்பு குறைந்த விலையில் (சுமார் நூறு அமெரிக்க டாலர்கள்) உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு கணினியை வடிவமைத்து வருகிறது.
பிரிவுகள்
தொகு1970 களின் பிற்பகுதியில் சிறிய கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பிற்காலங்களில் அதனை வடிவமைக்கும் முயற்சி தீவிரம் அடைந்தது. மடிக்கணினிகள் பல "பெயரும் உருவமும் செயலும்" பெற்றன.
பாரம்பரிய மடிக்கணினி
தொகுஒரு பாரம்பரிய லேப்டாப் கணினி வடிவம் அதன் உள் தரப்பும் ஒரு மீது ஒரு திரை மற்றும் எதிர் ஒரு விசைப்பலகை மூலம், ஒரு கலாம் ஷெல் உள்ளது. அது மூடப்படும் போது திரை மற்றும் விசைப்பலகையை அணுக முடியாது. பொதுவாக அவர்கள் 13 முதல் 17 அங்குல விட்டம் உள்ள திரையைப் பயன்படுத்தினர். இது விண்டோஸ் 8.1 மற்றும் ஓஎசு X ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.[மேற்கோள் தேவை]
சப்நோட்புக்
தொகுஇது அளவில் சிறியதாகவும், குறைந்த எடை மற்றும் நீண்ட மின்கல ஆயுள் உடன் சந்தைப்படுத்தப்படும் மடிக்கணினி. ஒரு மின்கலத்தின் ஆயுள் அதிகபட்சமாக 10 மணிநேரம் நீடிக்கும். இதன் எடை 0.8 முதல் 2 கிலோ வரையில் இருக்கும்.
நெட்புக்
தொகுநெட்புக் கம்பியில்லா தகவல்தொடர்பு மற்றும் இணைய அணுகல் குறிப்பாக மலிவான, எடைகுறைவு, ஆற்றல் திறன் அதிகம். இது முதன் முதலில் 2008ஆம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதன் விலை, எடை மக்களைக் கவர்ந்தது. லினக்சு பதிப்பே அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் 2012 இல் அனைத்து முக்கிய நெட்புக் உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
மாற்றக்கூடிய மடிக்கணினி
தொகுதற்போதைய மாற்றக்கூடிய மடிக்கணினிகள் விசைப்பலகைகளுடன் இணைந்து வருகின்றன. இதனை தனித்தனியாக பிரித்தும் இயக்கலாம். பெரும்பாலும் இவை தொடுதிரை அமைப்புடனே வருகின்றன. அப்பொழுது தான் இலகுவாக இருக்கும்.
லேப்லேட் மடிக்கணினி
தொகுஇதுவே தற்பொழுது அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் லேப்டாப் ஆகும். இதனை அல்ரா புக் எனவும் கூறலாம். தொடுதிரை அமைப்பிலும் கூட இது வருகிறது. அடக்கமான மற்றும் நீண்ட நேரம் மின் அமைப்பை தாங்கும் மின்கலங்கள் உள்ளதால் இது சந்தையில் நல்ல விலையில் உள்ளது. இதில் தற்பொழுது விண்டோஸ் போட்டு தரப்படுகிறது.
மேசைக் கணிப்பொறிக்குப் பதிலாக மடிக்கணினி
தொகுஇந்த வகை கணினிகள் அதிக வேலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இது அளவில் சாதாரண லேப்டாப் அளவை விட பெரியதாக இருக்கும். எடையும் அதிகமாக இருக்கும். ஆனால் வேலைப்பாடு மேசைக் கணிப்பொறிக்கு இணையாக இருக்கும். இதன் திரை அளவு 15 அங்குலம் அல்லது அதற்கு மேலாக இருக்கும். இதன் மின்கலன் அளவும் பெரிதாக இருக்கும். விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
வன்மையான நோட்புக்
தொகுஇது எல்லா வகையிலும் தாங்க கூடியது. காலநிலை, குளிர், வெப்பம் ஆகியவற்றை மற்ற எந்த மடிக்கணினியை விட அதிகமாக தாங்கக்கூடியது. இது வேலை அதிகமாக உள்ள பயனாளர்கள் உபயோகப்படுத்துவதாகும்.[சான்று தேவை]