மாக் இயக்குதளம்

(மாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாக் இயக்குதளம் ( Mac OS) ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டோஷ் வகை கணினிகளுக்கான வரைகலை பயனர் இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்குதள தொடர் ஆகும். மாக்கின்டோசு பயனர் பட்டறிவே வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக்கியதாக பாராட்டப்படுகிறது. 1984ஆம் ஆண்டு மாக்கின்டோசுகளில் இது கணினியுடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டம் மென்பொருள் என அழைக்கப்பட்டு வந்தது.

மாக் ஓ.எஸ்
மாக் இயக்குத் சின்னம்
OS X Yosemite Desktop.png
விருத்தியாளர் ஆப்பிள்
இயங்குதளக்
குடும்பம்
முதல்நிலை மாக் இயக்குதளம் (அமைப்பு 1–7, மாக் ஓஎஸ் 8–9)
யுனிக்சு (மாக் ஓஎஸ் X)[1][2][3]
மூலநிரல் வடிவம் உரிமையுடைய மென்பொருள் ( திறமூல மென்பொருள் பகுதிகளுடன்)
அனுமதி உரிமையாளர் மென்பொருள் EULA
தற்போதைய நிலை பொதுமக்கள் வெளியீடு
வலைத்தளம் www.apple.com/macosx/

கருவுறல்

தொகு

துவக்கத்திலிருந்தே ஆப்பிள் நிறுவனம் தனது கொள்கையளவிலேயே பயனர்கள் இயக்குதளத்தைக் குறித்த எந்த அறிவுமின்றி கணினியை பயன்படுத்தக் கூடியதாக தனது இயக்குதளம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. பிற இயக்குதளங்களில் அவற்றின் செயல்பாடு குறித்த ஆழ்ந்த அறிவு வேண்டியப் பணிகள் மாக்கின்டோசுகளில் சுட்டியின் உள்ளுணர்வான சைகைகளாலும் வரைகலை கட்டுப்பாட்டு தட்டிகளாலும் நிறைவேற்றப்பட்டன. பயனரின் பயன்பாடு இனிமையாக அமைவதும் எளிதாக கற்கவியல்வதும் நோக்கமாக இருந்தது. இதனால் சந்தையிலிருந்த பிற மென்பொருட்களை விட வேறானதாக காட்ட முயன்றது. போட்டி மென்பொருளாக இருந்த மைக்ரோசாப்ட் டாஸ் இயக்குதளம் நுட்பவழியே மிகவும் கடினமாக இருந்தது.

இயக்குதளத்தின் கருனி ஓர் ரோமில் சேமிக்கப்பட்டிருந்தது; மேம்படுத்தல்கள் கட்டணமின்றி பயனர்களுக்கு நெகிழ் வட்டு மூலமாக ஆப்பிள் முகவர்கள் வழங்கி வந்தனர். இதனால் இயக்குதள மேம்படுத்தல்கள் பயனர்களின் குறைந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்ற முடிந்தது. இதுவும் போட்டி மென்பொருள்களின் மேம்படுத்தல் முறைமைகளை விட எளிதாக அமைந்திருந்தது. சிஸ்டம் 7.5 முதலாக ஆப்பிள் இம்முறையை கைவிட்டு மேம்பாட்டு மென்பொருட்களை தனி வருமானம் ஈட்டும் வழியாக மாற்றிக் கொண்டது.

பதிப்புகள்

தொகு
  • 10.0: சீட்டா (Cheetah)
  • 10.1: பூமா (Puma)
  • 10.2: ஜகுஆர் (Jaguar)
  • 10.3: பாந்தர் (Panther)
  • 10.4: டைகர் (Tiger)
  • 10.5: லேபெர்ட் (Leopard)
  • 10.6: ஸ்நொ லேபெர்ட் (Snow Leopard)
  • 10.7: லயன் (Lion)
  • 10.8: மவுண்டன் லயன் (Mountain Lion)
  • 10.9: மாவரிக்சு (Mavericks)
  • 10.10 (Yosemite)
  • 10.11 (El Capitan)
  • 10.12 (Sierra)
  • 10.13 (High Sierra)
  • 10.14 (Mojave)
  • 10.15 (Catalina)
  • 11.0 (Big Sur)

மேற்கோள்கள்

தொகு
  1. "The Open Brand - Register of Certified Products - Mac OS X 10.5 on Intel-based Macintosh computers". The Open Group. பார்க்கப்பட்ட நாள் November 22, 2009.
  2. "The Open Brand - Register of Certified Products - Mac OS X 10.6 on Intel-based Macintosh computers". The Open Group. பார்க்கப்பட்ட நாள் November 22, 2009.
  3. "Apple page on UNIX". Apple Inc. பார்க்கப்பட்ட நாள் November 5, 2008.

நூற்கோவை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்_இயக்குதளம்&oldid=3224290" இலிருந்து மீள்விக்கப்பட்டது