பைக்காரா அருவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காராஅருவியாக உருவெடுத்துள்ளது. 55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது[1][2]. இந்த‌ பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற‌ சுற்றுலாப் படகு நிலையம் இதில் அமைந்துள்ளது.

பைக்காரா அருவி
மொத்த உயரம்61 மீட்டர்கள் (200 அடி)

மேற்கோள்கள்

தொகு
  1. "PYKARA". Retrieved August 19, 2011.
  2. "Ooty - Pykara Falls". ooty.com. Retrieved August 19, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்காரா_அருவி&oldid=3907256" இலிருந்து மீள்விக்கப்பட்டது