பைசாந்தியத்தை நோக்கிய கடல்பயணம்
பைசாந்தியத்தை நோக்கிய கடல் பயணம் (Sailing to Byzantium) என்பது வில்லியம் பட்லர் யீட்சு என்பவரால் தெ டவர் என்ற கவிதைத் தொகுப்பில் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதையாகும். இது கான்ஸ்டண்டினோபிலை நோக்கிய புனிதப்பயணம் பற்றிய கவிதையாகும். இதில் யீட்ஸ் மனிதர்களின் ஆன்மீக உணர்வையும், வீசத்தையும் தெளிவுறக் கூறுகிறார்.
கவிதைச் சுருக்கம்
தொகுஇதில் மனிதர்களின் வயது முதிர்ச்சியில் ஏற்படும் அதீத வலி மேலும் மனிதர்களுக்கு முக்கியமான தேவையான ஆன்மீக பணிகளைப் பற்றியும் கூறுகிறார். மனிதனின் உடலானது இறந்து போக்க்கூடியது. எனவே எல்லா மனிதர்களையும் இளவயதிலேயே பைசாண்டியத்திற்கு பயணம் மேற்கொள்ள சொல்கிறார். பைசான்டியத்தில் உள்ள நான்கு கவுகளும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. அங்கு உள்ள தூய்மையான நெருப்பினை சுற்றி வந்து துறவிகள் புனிதம் அடைகின்றனர். கவிஞர் தனது இறப்பிற்குபின்னர் ஒரு தங்கப்பறவையாக மாற விரும்புகிறார். அவர் குறிப்பிடும் தங்கப்பறவையானது பைசாந்தியம் நகரில் உள்ள தங்கக் கிளையில் அமர்ந்து நேற்று, இன்று, நாளை பற்றிய பாடலை இனிமையாக இசைக்கிறது. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
உசாத்துணைகள்
தொகு- Sailing to Byzantium. பரணிடப்பட்டது 2014-03-25 at the வந்தவழி இயந்திரம் Poetry Archives
- Sailing to Byzantium. The Britannica Guide to the Nobel Prizes. 1997. 30 April 2006. பரணிடப்பட்டது சூன் 22, 2002 at the வந்தவழி இயந்திரம்