பைபின்னேரியா
பைபின்னேரியா (Bipinnaria) இளம் உயிரி என்பது பெரும்பாலான நட்சத்திர மீன் இளம் உயிரி ஆகும். இது வளர்ச்சியின் முதல் நிலையாகும். பொதுவாக இதன் தொடர்ச்சியாக பிராக்கியோலேரியா இளம் உயிரி தோன்றும். இடப்பெயர்வும் உணவூட்டமும் குற்றிலைகளால் ஆனப் பட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தங்கள் குட்டிகளை அடைகாக்கும் நட்சத்திர மீன்களில் பொதுவாக பைபின்னாரியா வளர்நிலை இல்லை. இத்தகைய உயிரிகளில் முட்டைகளிலிருந்து நேரடியாக சிறிய அளவிலான முதிர் உயிரிகள் உருவாகின்றன.[1]
பைபின்னேரியா இளம் உயிரி நீரில் மிதந்து வாழும், ஒரு மிதவைவாழி ஆகும். ஆரம்பத்தில் உடல் முழுவதும் குற்றிழைகளால் மூடப்பட்டிருக்கும் பைபின்னேரியா இளம் உயிரி நாளாக குற்றிழைகள் ஒரு பட்டைபோல் வளையத்தினை உருவாக்கும். ஒரு இணை குறுகிய, திடமான கரம் போன்ற நீட்சிகள் தோன்றும். இவற்றில் குற்றிலைப் பட்டைகள் விரிவடைகின்றன.[2][3]
பைபினேரியா இளம் உயிரி தனித்து நீரில் நீந்திச் செல்லவும் நீரில் மிதந்துகொண்டிருக்கும் உணவுத்துகள்களை பிடிக்கவும் குற்றிலைகள் உதவுகிறது.
வளர்ச்சியின் இறுதியில், பைபினேரியா இளம் உயிரியின் முன் முனையில் மூன்று கூடுதல் கரங்கள் உருவாகின்றன. இதன் பின்னர் இந்த இளம் உயிரி நீரில் அமிழ்ந்தி ஏதேனும் ஒரு ஆதாரத்தின் மீது ஒட்டிக்கொண்டு பிராக்கியோலேரியாவாக மாறுகிறது. பொதுவான நட்சத்திர மீன்களில், ஆசுடீரியாசு உட்பட சில சிற்றினங்களில், பைபினேரியா நேரடியாக இடைநிலை இல்லாமல் முதிர்ச்சியடைகிறது.
பைபினேரியா தோற்றத்தில் சில அரைநாணிகளின் தோர்னேரியா போலக் காணப்படுகிறது. இது ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து ஆம்புலாக்ரேரியா வம்சாவளியைப் பிரதிபலிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Barnes, Robert D. (1982). Invertebrate Zoology. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 945–946. ISBN 0-03-056747-5.
- ↑ McEdward LR. 1995. Evolution of pelagic direct development in the starfish Pteraster tesselatus (Asteroidea: velatida). Biol J Linn Soc 54:299–327.
- ↑ Raff RA, Byrne M. 2006. The active evolutionary lives of echinoderm larvae. Heredity, 97:244–252 .