பைபெரோசீன்

பைபெரோசீன் (Biferrocene) என்பது [(C5H5)Fe(C5H4)]2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம உலோகச் சேர்மம் ஆகும். பெர்ரோசீனை முறையான ஐதரசன் பிணைப்பு நீக்க வினைக்கு உட்படுத்துவதால் பைபெரோசீன் உருவாகிறது. இபபெரோசீன் பைபீனைல் மற்றும் பென்சீன் போன்ற சேர்மங்கள் இரண்டுடன் இணைந்த தொடர்பையும் கொண்டுள்ளது. ஆரஞ்சு நிறத்துடன் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட திண்மமாகவும் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் உள்ளது.

பைபெரோசீன்
இனங்காட்டிகள்
1287-38-3.
பண்புகள்
C20H18Fe2
வாய்ப்பாட்டு எடை 370.05 g·mol−1
தோற்றம் அடர் ஆரஞ்சு நிறத் திண்மம்
உருகுநிலை 239–240 °C (462–464 °F; 512–513 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அயோடோபெரோசீனை உல்மான் பிணைப்பு வினைக்கு உட்படுத்துவதால் பைபெரோசீன் உண்டாகிறது [1]. இதனுடைய ஓர் எலக்ட்ரான் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருளான [(C5H5)Fe(C5H4)]2+ அயனி ஒரு வகையான கலப்பு இணைதிறன் சேர்மமாக கவனத்தை ஈர்க்கிறது [2].

பைபெரோசெனைலீன் [Fe(C5H4)2]2 என்ற சேர்மம் இதனுடன் தொடர்புடைய ஓர் சேர்மமாகும். இதில் அனைத்து சைக்ளோபெண்டாடையீனைல் வளையங்களும் பிணைக்கப்பட்டுள்ளன. பைபெரோசீன் முறையாக ஒரு பல்வேலீன் ஈந்தணைவியிலிருந்து வருவிக்கப்படுகிறது. பைபெரோசெனைலீன் [Fe(C5H4)2]2 சேர்மம் இரண்டு ஈந்தணைவிகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. M. D. Rausch (1961). "Ferrocene and Related Organometallic π-Complexes. IV. Some Ullmann Reactions of Haloferrocenes". J. Org. Chem. 26: 1802–1805. doi:10.1021/jo01065a026. 
  2. Cowan, D. O.; LeVanda, C.; Park, J.; Kaufman, F. (1973). "Organic Solid State. VIII. Mixed-Valence Ferrocene Chemistry". Accounts Chem. Res. 6: 1-7. doi:10.1021/ar50061a001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைபெரோசீன்&oldid=2678993" இலிருந்து மீள்விக்கப்பட்டது