பைராக்சுமாங்கைட்டு
பைராக்சுமாங்கைட்டு (Pyroxmangite) என்பது MnSiO3.[4]என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ரோடோனைட்டின் உயர் அழுத்த, தாழ்வெப்ப ஈருருவக் கனிமமாகும் [1]. 1913 ஆம் ஆண்டு இக்கனிமம் முதன் முதலில் கண்டறிந்து விவரிக்கப்பட்டது. பைராக்சீன்கள் என்ற கனிமக் குழுவில் இடம்பெற்றிருந்த காரணத்தால் பைராக்சீன் என்ற பெயரைப் பெற்றது. மற்றும் ஒரு மாங்கனீசு உறுப்பினராகவும் கருதப்படுகிறது. மேலும் இது பைராக்சுபெர்ரோயிட்டு தொடரில் பல கனிமங்களாக உருவாகிறது [5]
பைராக்சுமாங்கைட்டு Pyroxmangite | |
---|---|
யப்பானில் கிடைத்த பைராக்சுமாங்கைட்டு | |
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | MnSiO3 |
இனங்காணல் | |
நிறம் | இளஞ் சிவப்பு, சிவப்பு, பழுப்பு |
படிக அமைப்பு | முச்சாய்வு |
இரட்டைப் படிகமுறல் | {010} மடிப்பு நிலை, {001}இல் எளிமை |
பிளப்பு | {110} இல் சரிபிளவு, {110}, (110) ^ (110) = 92° மோசமான பிளவு{010}, {001} |
முறிவு | சமமற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 5 1⁄2 – 6 |
மிளிர்வு | முத்துப் போல பளபளப்பு |
கீற்றுவண்ணம் | நிறமற்றது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.8 |
இரட்டை ஒளிவிலகல் | δ=0.018 |
பிற சிறப்பியல்புகள் | உருவவியல்: படிகங்கள், மணிகள்,சிறுமணிகள் |
மேற்கோள்கள் | [1][2][3] |
மாங்கனீசு நிறைந்த உருமாற்ற தாதுப் படிவுகளில் பைராக்சுமாங்கைட்டு தோன்றுகிறது. இதனுடன் சிபெசார்ட்டைன், டெப்ராயிட்டு, அல்லிகேன்யைட்டு, ஆசுமானைட்டு, பைரோபேனைட்டு, அலாபேன்டைட்டு, ரோடோனைட்டு மற்றும் ரோடோகுரோசைட்டு போன்ற கனிமங்களும் கலந்து காணப்படுகின்றன [3].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பைராக்சுமாங்கைட்டு கனிமத்தை Pxm[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ralph, Jolyon, and Ida Chao. "Pyroxmangite: Pyroxmangite Mineral Information and Data." MinDat.org
- ↑ Barthelmy, David. "The Mineral Pyroxmangite." minerals.net
- ↑ 3.0 3.1 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (eds.). "Pyroxmangite". Handbook of Mineralogy (PDF). Vol. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0962209716. பார்க்கப்பட்ட நாள் December 5, 2011.
- ↑ Pinckney, Linda R, and Charles W Burnham. "High-Temperature crystal structure of pyroxmangite." American Mineralogist 73 (1988): 809–817. GeoScienceWorld. Web. 13 September 2010.
- ↑ Ford, W.E.; Bradley, W.M. (1913). "Pyroxmangite, a new member of the pyroxene group and its alteration product, skemmatite". American Journal of Science 36: 169–174. doi:10.2475/ajs.s4-36.212.169.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.