பைரிசால்
பைரிசால் (Bairisal) 17 ஆம் நூற்றாண்டில் சோட்டா நாக்பூரிலிருந்த ஓர் நாகவன்ஷி மன்னராவார். இவர் 1599இல் தனது தந்தை மது சிங்கிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இவரது தலைநகரம் குக்ராகரில் இருந்தது.
பைரிசால் | |
---|---|
மன்னன் | |
ஆட்சிக்காலம் | 1599-1614 |
முன்னையவர் | மது சிங் |
பின்னையவர் | துர்ஜன் சால் |
பிறப்பு | குக்ராகர் |
குழந்தைகளின் பெயர்கள் | துர்ஜன் சால் |
அரசமரபு | நாகவன்ஷி பேரரசு |
தந்தை | மது சிங் |
மதம் | இந்து சமயம் |
இவர் தில்லிக்குச் சென்று முகலாய பேரரசர் அக்பருடன் அவரது பல போர்களில் உடன் சென்றார். இவரது வீரச் செயல்களில் மகிழ்ச்சி அடைந்த அக்பர் இவருக்கு ஆடை மற்றும் பிற மதிப்புமிக்க பரிசுகளை வழங்கினார். ஷேர்கட்டியின் பர்கானா (ஆட்சிப் பகுதி ) இவருக்கு வழங்கப்பட்டது. அக்பரின் அரசவையிலிருந்து திரும்பிய பிறகு, தனது தலைநகரை குக்ராகரில் இருந்து நவரத்தன்கருக்கு மாற்றினார். 1613இல், இவர் முகலாயர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியில் ஈடுபட்டார். முகலாய வரலாற்றை எழுதிய பஹரிஸ்தான்-இ-கைபி என்பவரின் கூற்றுப்படி, பைரிசாலுக்கு எதிராக ஒரு முற்றுகைத் தொடங்கப்பட்டது. ஏனெனில் இவர் 30 மிஸ்கால் எடையுள்ள வைரங்களை கப்பமாகச் செலுத்த தவறிவிட்டார். இந்த முற்றுகைக்கு ஜாபர் கான் என்பவர் தலைமை தாங்கினார். இவருக்குப்பின் 1614இல் இவரது மகன் துர்ஜன் சால் பதவிக்கு வந்தார். [1] [2] [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nagbanshis And The Cheros". archive.org.
- ↑ Mughal Administration and the Zamindars of Bihar.
- ↑ "Mughal Administration and the Zamindars of Bihar". dokumen.pub.