பைரேந்திர பிரசாத் குப்தா

பைரேந்திர பிரசாத் குப்தா (Birendra Prasad Gupta) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (எம்-எல்எல்) விடுதலை கட்சியின் உறுப்பினரான குப்தா 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான குர்சித் உர்ப் பிரோஜ் அகமது தோற்கடித்து சிக்டா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்றார்.[1][2][3]

பைரேந்திர பிரசாத் குப்தா
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்குர்சித் உர்ப் பிரோஜ் அகமது
பீகார் சட்டமன்றம்
தொகுதிசிக்டா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

கடந்த காலங்களில் இவர் 2010 மற்றும் 2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

குப்தா 2014 இந்திய பொதுத் தேர்தலில் வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Birendra Prasad Gupta sikta candidate". News18.
  2. "Birendra Prasad Gupta". My Neta Info.
  3. "Birendra Prasad Gupta Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.