பைரோமெல்லிடிக் இருநீரிலி
இரட்டை கார்பாக்சிலிக் அமில நீரிலி
பைரோமெல்லிடிக் இருநீரிலி (Pyromellitic dianhydride) என்பது C6H2(C2O3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலும், இதுவொரு இரட்டை கார்பாக்சிலிக் அமில நீரிலியாகவும் கருதப்படுகிறது. காப்டன் போன்ற பல்லிமைடு பலபடிகள் தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். பைரோமெல்லிடிக் இருநீரிலி வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. 1,2,4,5-டெட்ராமெத்தில்பென்சீனை வாயுநிலை ஆக்சிசனேற்றம் செய்து பைரோமெல்லிடிக் இருநீரிலி தயாரிக்கப்படுகிறது. 1,2,4,5-டெட்ராமெத்தில்பென்சீனுடன் தொடர்புடைய வழிப்பெறுதிகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இனங்காட்டிகள் | |
---|---|
89-32-7 | |
பண்புகள் | |
C10H2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 218.12 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 283 முதல் 286 °C (541 முதல் 547 °F; 556 முதல் 559 K) |
கொதிநிலை | 397 முதல் 400 °C (747 முதல் 752 °F; 670 முதல் 673 K) |
நீருறிஞ்சும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- C6H2(CH3)4 + 6 O2 → C6H2(C2O3)2 + 6 H2O
என்பது இவ்வினைக்கான சமன்பாடு ஆகும்:[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ F. Röhrscheid "Carboxylic Acids, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a05_249